படம்: மரிஜுவானா
நடிப்பு: ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம்
இசை: கார்த்திக் குரு
ஒளிப்பதிவு: பாலா ரோசைய்யா
இயக்குனர்: எம்டி ஆனந்த்
தியேட்டர் ஒன்றில்அமைச்சர் மகனும் தியேட்டரில் வேலை செய்பவரும் மர்மமான முறையில் கொள்ளப்படுகிறார்கள்.போலீஸ் அதிகாரி ரிஷி இந்த கொலையாளியை கண்டுபிடிக்க தீவிரம் காட்டுகிறார். அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதிர்ச்சி தரும் இந்த சம்பவங்களில் எல்லா கொலைகள் நடக்கும் இடத்தில் கஞ்சா இருப்பதை ரிஷி கண்டுபிடிக்கிறார். கொலையாளி யார்? எதற்காக கொல்கிறான் என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
சஸ்பென்ஸ் திரில்லர் கதையான இதில் நடித்திருக்கும் ஹீரோ ரிஷி ஏற்கனவே அட்டு படத்தில் நடித்து மிரள வைத்தார். முறைப்பாகவே நடிப்பை வெளிப்படுத்துவது ரிஷியின் ஸ்டைல் போலிருக்கிறது. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ரிஷியின் முகத்தில் பல நேரம் கவலை ரேகை படர்வதை தவிர்க்கலாம்.
ஆஷா பாத்தலோம் ஹீரோயின் ஹீரோவுக்கு துணையாக துப்பறியும் வேலை செய்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவு செய்துவிடுகிறார். வில்லன் வேடம் குறிப்பிடும்படி நடிப்பை தந்து கதையின் விறு விறுபுக்கு உதவி இருக்கிறார்.
மரிஜுவானா என்றால் என்ன என்று படம் வெளியாவதற்கு முன் கேட்டு வந்தனர். இப்போதும் சிலர் அதுபற்றி தெரியவில்லை என்கின்றனர். போதை தரும் கஞ்சாவுக்குத் தான் மர்த்ஜுனா என்று பெயர். போதையின் உச்சிக்கு செல்லும் ஒருவன் நினைத்தால் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதற்கு இயக்குனர் எம்டி ஆனந்த் தத்ரூபமாக பதில் சொல்லி இருக்கிறார். .
கடினமாக சஸ்பென்ஸ் கதையென்றாலும் திரைக்கதையால் எளிதாக்கி ரசிக வைத்திருக்கிறார் இயக்குனர் எம் டி ஆனந்த். வில்லனை வித்தியாசமாக ஹேண்டில் செய்திருக்கிறார்கள். பவர் ஸ்டார் காமெடி ரிலாக்ஸ். கார்த்திக் குரு இசையில் பாடல் கேட்கத் தூண்டுகிறது. பாலா ரோசையாவின் கேமிரா காட்சிகளை கதைக்கு மிஞ்சாமல் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
மரிஜுவானா’ க்ரைம் த்ரில்லர்.