படம்: மூக்குத்தி அம்மன்
நடிப்பு; நயன்தாரா, ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, மவுலி.
தயாரிப்பு: வேல்ஸ் இண்டர் நேஷனல் ஐசரி கணேஷ்
ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன்
இசை: கிரிஷ்
இயக்குனர்: ஆர்.ஜே.பாலாஜி, என் ஜே சரவணன்
ரிலீஸ்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார். (ஒடிடி)
அந்த காலத்தில் ஆதிபாராசக்தி என்ற படம் வந்தது. அதில் அம்மன் நேரடியாக வந்து சுருளிராஜனுக்கு காட்சி தருவார். அப்படியொரு கருதான் இப்படத்தின் மைய மாக இருந்து கதையை சுழல் வைத்திருக்கிறது. நாகர்கோ விலில் உள்ளுர் டிவி நிருபராக ஆர்.ஜே. பாலாஜி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தன் வருமானத்தில் தனது , தாத்தா, அம்மா ஊர்வசி மற்றும் 3 தங்கைகளையும் காப்பாற்றி வருகிறார். திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பதால் ஊர்வசி திருப்ப திக்கு செல்ல பல ஆண்டு களாக முயற்சி செய்கிறார் ஆனால் அது முடியவில்லை. பிறகு குல தெய்வம் கோவி லுக்கு சென்றால் கஷ்டங்கள் தீரும் என்று குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர்கள் கனவில் வருகிறார் மூக்குத்தி அம்மன் நயன்தாரா பின்னர் நிஜத்தில் பிரசன்னமாகி ஆர்.ஜே. பாலாஜியுடன் ஊரில் உலா வருகிறார். ஆன்மிகவாதி என்ற போர்வையில் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் போலி சாமியா ருக்கு பாடம் புகட்ட எண்ணு கிறார் நயன்தாரா. ஆர்.ஜே.பாலாஜி மூலமாக சில கேள்விகள் கேட்டும் அம்மன் நயன்தாரா பின்னர் நேருக்கு நேர் சாமியாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு படம் தெளிவான முடிவை தருகிறது.
நயன்தாரா நடிக்கும் அம்மன் படம் கொஞ்சம் வெயிட்டாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்த்து பார்க்கத் தொடங் கினால் இது வெயிட்டோ வெயிட்டாக உருவாகி இருக் கிறது. இந்த வசனங்களை யெல்லாம் யார் பேசினால் எடுபடும் என்று ஆர்.ஜே. பாலாஜி யோசித்து செய்தி ருக்கும் நட்சத்திர தேர்வு பொருத்தம்.
அம்மன் வேடத் துக்கு அம்ச மாக பொருந்தி இருக்கும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நக்கலாகவும் நய்யாண்டியாகவும் சாமியாரி டம் வசன விளையாட்டு விளையாடி சபாஷ் போட வைக்கிறார். நயன்தாரா.
நயன் தாராவுக்கும் சாமியா ருக்கும் நேருக்கு நேர் வார்த்தை மோதல்கள் நடக் கிறது.
’சாமி ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யணும் என்றால் நேரடியாக சாமியே செய்யலா மே நடுவுல எதுக்கு உன்ன மாதிரி புரோக்கர்’ என்று நயன்தாரா கூற ஆவேச அடைந்த சாமியார், ’நாங்கள் புரோக்கர் அல்ல மதத்தையும் சாமியையும் காப்பத்துற ஆன்மிக காவலர்கள்’ என்று கூறுகிறார்.
’இவ்ளோ பெரிய பிரபஞ்சத் துல நீ தூசி கூட கிடையாது. நீ, கடவுள காப்பாத்திரியா. சரி நீயே காப்பாத்து.. சரி எந்த கடவுள காப்பத்துவ. உங்கள உருவாக்குன கடவுளயா.. இல்ல நீங்க எல்லாம் சேர்ந்து உருவாக்கினீங்களே அந்த கடவுளயா?.
இத செஞ்சா அந்த பரிகாரம் அத செஞ்சா இந்த பரிகாரம்னு பயத்த வச்சி தானே காலத்த ஓட்றிங்க கொஞ்சம் காசு கொடுத்தா போதும் பாவத்த ஈஸியா மன்னிச்சுடுவாரு இல்ல..
போதும், உங்கள மாதிரி ஆளுங்க கடவுள காப்பாத் தனது போதும். அவரே அவர அவரே காப்பத்திக்குவாறு..
யாராவது எதாவது ஒரு கேள்வி கேட்டா மதம் பின்னாடி இருக்கு, அந்த நாட்ல இருந்து பணம் வருது இந்த நாட்ல இருந்து பணம் வருதுன்னு சொல்லீடுவீங்க இல்ல..
என்று மொட்டை சாமியாரை நார் நாராக கிழித்து தொங்க விடுகிறார்.
ஆர்.ஜே.பாலாஜி சாமர்த்திய மான இயக்குனராக மட்டுமல் லாமல் நடிப்பிலும் நல்ல பெயரெடுக்கிறார். தான் அம்மன் என்று கூறும் நயன் தாராவை சோதித்துபார்க்கும் பாலாஜி செம காமெடி செய்கி றார். ஊர்வசி, மௌலி, தங்கை ஸ்மிருதி வெங்கட் என குடும்பமாக ஒரு காமெடி விருந்து படைக்கின்றனர்.
போலி சாமியார் அஜய் கோஷ் வில்லனாகவே கண்ணில் பதிகிறார்.
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவ ணனுடன் இணைந்து துணிச்ச லாக படத்தை இயக்கி இருக் கிறார்கள். கிரிஷ் இசை காட்சி களோடு ஒன்றி யிருக்கிறது.
‘மூக்குத்தி அம்மன்’ மத வாதிகள் மீது நயன்தாரா வீசியிருக்கும் திரிசூலாயுதம்.