Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மனிதர்கள் (பட விமர்சனம்)

படம்: மனிதர்கள்
நடிப்பு: தமிழ் வேலன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம்

தயாரிப்பு: ஸ்டுடியோ மூவிங் டர்டில், ஶ்ரீ கிருஷ்ணா பிக்சர்ஸ்

இசை: அனிலேஷ் எம் மேத்யு

ஒளிப்பதிவு: ஆபிரகாம் ஜார்ஜ்

இயக்கம்: இராம் இந்திரா

பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

திண்டுக்கல் பகுதியில் ஒரு இரவில் நடக்கும் சம்பவமாக உருவாகியிருக்கிறது மனிதர்கள் கதை.
இது கதை மட்டுமல்ல ஒவ்வொருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடி.

நண்பர்கள் 6 பேர் இரவில் மது குடிக்கிறார்கள் திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் எதிர்பாரத விதமாக ஒருவர் இறந்து விட மற்றவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். யாருக்கும் தெரியாமல் அந்த உடலை புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடிவு செய்கிறார்கள். அப்போது ஒவ்வொருவருக்குள்ளும் மனப்போராட்டம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கிறது

இந்த படத்தில் ஹீரோ என்பதெல்லாம் கிடையாது கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் வெவ்வேறு உணர்வுகளை எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள், அவர்களில் நாம் எந்த வகையை சார்ந்தவர் என்பதை உள்ளுக்குள் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எல்லாம் புது முகங்கள் என்பதால் இவருக்கு இதுதான் பாணி என்று கணிக்க முடியாத அளவுக்கு எதார்த்த மாகவும் சில சமயங்களில் ஓவர் டோஸாகவும் நடித்துள்ளனர்.

பதற்றம், பயம், துணிச்சல், ஏமாற்றம், என வெளிப்படும் உணர்வுகள் காட்சிகளை கட்டமைத்தாலும் திடீர் கத்தல்கள் காட்சிகளை நீர்த்துபோகச் செய்கிறது. வசனங்களையும், பாடல்களையும் கூர்ந்து நோக்க வேண்டி இருக்கிறது.
படத்தின் பெரிய ஹெலைட் ஒளிப்பதிவாளரின் திறமையான ஆளுமை இரவில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ற மூடை அரங்கம் முழுவதும்
நிரப்பிவிடுகிறார் . கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் படமாகியிருக்கும் முக்கிய காட்சிகள் பாராட்டத்தக்கது. இதுவே ஹாலிவுட் படமாக இருந்திருந்தால் மிஷ்கின் போன்ற நம் இயக்குனர்கள் சிலர் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பர்கள். ஆனாலும் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் கவனத்தை ஈர்க்க தவறவில்லை.

இசையமைப்பாளர் அனிலேஷ் எல்.மேத்யூ சிறப்பு.

கமர்ஷியல் படங்களுக்கான அம்சங்கள் இருந்தாலும் அவற்றை பிரமாண்டமாக்க விடாமல் பட்ஜெட்  அரக்கன் கைகளையும். கேமராவையும்  கட்டிட்டிப்போட்டிருக்கிறான் . ஆனாலும் விருது படங்கள் வரிசையில் முந்திக்கொண்டு நிற்கும் படமாக மனிதர்களை இயக்கியிருக்கிறார் இராம் இந்திரா.

மனிதர்கள் –  வித்தியாச அனுபவம்.

 

Related posts

டங்கி:400 கோடி வசூலைக் கடந்து சாதனை

Jai Chandran

கார்த்திக் நடித்துள்ள ” தீ இவன் ” படத்தின் டப்பிங் துவங்கியது

Jai Chandran

மைத்ரி மூவி மேக்கர்ஸ் 3வது தமிழ் படம் “மொத ராத்திரி “

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend