Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லக்கி பாஸ்கர் விமர்சனம்

படம்: லக்கி பாஸ்கர்

நடிப்பு: துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர்

தயாரிப்பு: பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

இசை: ஜிவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

இயக்கம்: வெங்கி அட்லுரி

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா

மும்பையில் வாழும் தமிழ் குடும்பங்களில் துல்கர் சல்மான் குடும்பமும் ஒன்று. மனைவி மகனுடன் வாழ்கிறார். வங்கியில் காசாளராக  வேலை செய்தாலும் போதிய வருமானம் இல்லாமல் கடன் வாங்கி குடும்பம் நடத்துகிறார். ஒரு சமயம் கடன்காரர்  துல்கரை நடுவீதியில் வைத்து அவமானப்படுத்துகிறார்.  இந்நிலையில் துல்கருககு வங்கியில்  கையாடல் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் மூலம் அவர் நிறைய சம்பாதிக்கிறார் எதிர்பாராத வகையில் வங்கி பொது மேலாளராக ஆகும் துல்கர் பங்கு சந்தையில் நடக்கும் ஊழலை கண்டுபிடித்து அதற்கு ஆப்பு வைக்க பார்க்கிறார். இதற்கிடையில் அந்த கூட்டம அவரிடம் சமாதானம் செய்து கொண்டு கோடிக்கணக்கில் பணம் தருகிறது. அடுக்கடுக்காக ஊழல்கள் நடக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அம்பலத்துக்கு வருகிறது அதன் பிறகு துல்கர் நிலை என்ன, பங்கு சந்தையில் ஊழல் நடத்தியவரின் கதி என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் ருசிகர பதில் அளிக்கிறது.

இளம் ஹீரோக்களில் டூயட்,b ஆக்சன் இல்லாவிட்டாலும் கதை நன்றாக இருந்தால் அதை தேர்வு செய்யும் நடிகர்களில் ஒருவராக துல்கர் சல்மான் இருக்கிறார் அதுவே அவருக்கு பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் இப்படத்திலும் ஆக்சன் டூயட் என்று இல்லாவிட்டாலும் முழுக்க முழுக்க நடிப்பை மையமாக வைத்து தனது கதாபாத்திரத்தை நிலை நிறுத்துகிறார்.

கடன் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன்காரனிடம் நடுரோட்டில் துல்கர் அவமானப்பட்டு அங்கு கூடியிருக்கும் மக்கள் நடுவே தலைகுனிந்து நடந்து செல்லும் போது பரிதாபம் பிறக்கிறது. அதன் பிறகு அவர் நடத்தும் ஊழல்கள் அனைத்துமே எதுவும் தவறாக தெரிய மறுக்கிறது.

ராம்கி உடன் கூட்டு சேர்ந்து வெளிநாட்டு பொருளை கடத்தி வந்து விற்கும் வியாபாரத்தில் லாபம் பார்க்கும் துல்கர் சல்மான் தொடர்ந்து அடுத்தடுத்த ஊழல்களுக்கு தலை அசைப்பதும், எந்த நேரத்தில் நிறுத்த வேண்டுமோ அந்த நேரத்தில் நிறுத்தி பதவியை உயர் பதவியாக வாங்கி அதிரடி காட்டுவதாக மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார் துல்கர்.

குறிப்பாக பங்குச்சந்தை விவகாரத்தில் துல்கர்  கண்டுபிடிக்கும் வங்கி பண மோசடி அவரை உச்ச பணக்காரர்கள் ஒருவராக மாற்றுவது பரபரப்பு.  கழுத்தையும் தாண்டி பணம் குவியும்   நிலையில் இதயத்தில் இருந்த குடும்ப அனுமதி காற்றில் பறந்து துல்கர் தள்ளாடும்போது இவ்வளவு ரிஸ்க் எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டுமா சந்தோஷமான குடும்பத்தை இழக்க வேண்டுமா என்ற கேள்வியை கண்முன் நிறுத்துகிறார்.

துல்கரின் மனைவியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி கணவன் தவறு செய்யும்போது அதை தட்டி கேட்பதும் ஒரு கட்டத்தில் அந்தத் தவறை தட்டி கேட்க முடியாமல் வாய்மூடி மௌனியாவதுமாக இருவித நடிப்பை வெளிப்படுத்தி மனதில் இடம் பிடிக்கிறார்.

படத்தில் புது மகங்கள் பலர் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே பாத்திரத்தில் ஒன்று இருப்பதால் அதிலிருந்து அவர்களை பிரித்துப் பார்க்க முடியவில்லை.

இயக்குனர் வங்கி அட்லுரி 90ஸ் காலகட்டஹர்ஷா  மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலை மையமாக வைத்து இந்த ஸ்கிரிப்ட்டை அமைத்திருக்கிறார். அந்த ஊழலை எப்படி எல்லாம் வங்கியின் ஒத்துழைப்புடன் ஹர்ஷத் மேத்தா நடத்தினார் என்பதை அக்குவேறு ஆணி வராக பிரித்து மேய்ந்திருக்கிறார்.

நிமிஸ் ரவி ஒளிப்பதிவு மூடுக்கு ஏற்ற ஒளிப்பதிவை செட் செய்திருந்தாலும் காட்சிகள் கொஞ்சம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசை பின்னணியில் காட்சிகளை விறுவிறுப்பாக இருக்கிறது.

லக்கி பாஸ்கர் – பங்குச்சந்தை ஊழல் அம்பலம்.

 

Related posts

30 MILLION+ people RRR on the dance floor

Jai Chandran

Hansika Motwani starrer Maha Audio Launch*

Jai Chandran

Vaibhav-Anagha starrer action thriller “Buffoon”‘

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend