Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் ‘சீன்’ (SCENE)

தீபாவளி திருநாளில் வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்- SCENE’*

ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் #சூர்யா 47 படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சீன்- SCENE ‘ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினித் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அஜ்மல் ஷபு மேற்கொள்ள கலை இயக்கத்தை அஸ்வினி காலே கையாண்டிருக்கிறார். காமெடி வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கு ‘சீன்- SCENE ‘என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யாவின் இன்பராஜ் ஐபிஎஸ்ஸின் கதாபாத்திர தோற்றம் – அவரின் திரை ஆளுமை – உரையாடல் –  பின்னணி இசை-  அனைத்தும் மாஸாக இருப்பதால்.. ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி வெளியாகிறது என்பதால்.. ரசிகர்களுக்கு ‘ஹாட்ரிக் டமாக்கா’ என கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’  என தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூர்யா… ஹாட்ரிக் வெற்றியை ‘சீன்- SCENE ‘ மூலம் வழங்குவதற்காக தயாராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

5 Directors to release a shortfilm #Triquetra

Jai Chandran

‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவு!

Jai Chandran

குரங்குகளுக்கு புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் தண்ணீர், உணவு ஏற்பாடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend