Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சர்தார் 2 (பட விமர்சனம் )

படம்: சர்தார்

நடிப்பு: கார்த்தி (இருவேடம் ), எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன்,  ஆஷிகா ரங்கநாத், ரஜீஷா விஜயன், முனீஸ்காந்த், நாசர், ஜீன் பால் லால், ஆஷிஷ் வித்யார்த்தி, யோகி பாபு, அச்சுத் குமார், அவிநாசி, பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல்

தயாரிப்பு: எஸ் லஷ்மண குமார் இஷான் சக்சேனா

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

இயக்கம்: பி எஸ் மித்ரன்

பிஆர்ஓ : சதீஷ் S2 மீடியா

கதை :  வெளிநாட்டு சதியால்  ஒரு கிராம் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக சாகிறார்கள். அந்த நோயிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டு சொட்டு மருந்து கொண்டு வர திட்டமிடப்படுகிறது அதேபோல் வெளிநாட்டு சக்திகள்  மீண்டும் தொற்றுநோயை பரப்புவதற்காக பயோ  கெமிக்கல் எனப்படும் கிருமி தொற்றுக்களை மீண்டும் பரவ வைத்து தாக்குவதற்கான கருவிகளையும் அனுப்புகின்றனர். அதனை கைப்பற்றுவதற்காக சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டாகர் (எஸ்.ஜே சூர்யா )  திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.  அவர் கையில் அந்த பயோ கெமிக்கல் கிடைத்தால் இந்தியாவில் அதனை பரவச் செய்து மக்களை கொல்ல திட்டமிடுகிறார். அவரது இந்த சதி திட்டத்தை சர்தார் (கார்த்தி) எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கிளைமாக்ஸ்.

சர்தார் முதல் பாகத்தில் கார்த்தி வெற்றிவாகை சூடிய நிலையில் அதன் தொடர்ச்சியாக சர்தார் 2 திரைக்கு வந்திருக்கிறது. சயின்ஸ் பிக்சனுடன் கூடிய ஆக்சன் படமாக இது உருவாகி இருக்கிறது.

சர்தார் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி அதிகாரிகள் மத்தியில் எழுப்பி கொண்டிருக்கும் நிலையில்  சர்தாராக நரைத்த வெள்ளை தாடி சிகை அலங்காரத்துடன் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கெத்தாக என்ட்ரி தரும் கார்த்தி அரங்கில் கைத்தட்டலை. அள்ளுகிறார்

சர்தார் கார்த்தி என்ட்ரிக்கு பிறகு படத்தில் ஆக்சன் அதிரடி கலை கட்டுகிறது. முதல் பாகம் வெளியான கதைக்கு முன்பு என்ன நடந்தது என்பதையும் அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதையும் ஒட்டு மொத்தமாக சேர்த்த திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பி எஸ் மித்திரன்.

சர்தாரின் மகனாக  இளமைத் தோற்றுத்துடன் மற்றொரு கதாபாத்திரத்திலும் கார்த்தி நடித்திருக்கிறார். தந்தை,,  மகன் இரு கதாபாத்திரத்திற்கும் நிறையவே வேறுபாடு காட்டி கார்த்தி நடித்திருப்பது இரு வேறு நடிகர்கள் நடித்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.

எந்நேரமும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ஆக்சன் மூடிலேயே சர்தார் கெட்டப்பில் இருக்கும் கார்த்தி, கொஞ்சம் இளவட்ட துள்ளலுடன் மகனாக மற்றொரு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருப்பதும் ரிலாக்ஸ் மூடை ஏற்படுத்துகிறது.

இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தாலும் காதல் என்ற பேச்சுக்கெல்லாம் இடம் தராமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடி மட்டுமே காட்டி இருக்கிறார். ரோப் காரில் எஸ் ஜே சூர்யா மற்றும் அவரது அடியாட்களுடன் கார்த்தி மோதுவது பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆக்சன் காட்சியின் முடிவில் இன்னொரு அதிர்ச்சியையும் புதைத்து வைத்திருக்கிறார் இயக்குனர் அது என்ன என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

எஸ் ஜே சூர்யா சர்வதேச கூலிப்படை தலைவனாக இருந்தாலும் கெட்டப்பை பொறுத்தவரை டிப்டாப் வில்லனாக தோற்றமளிக்கிறார். வழக்கம்போல் வசனங்களை சத்தம் போட்டு பேசினாலும் கிளைமாக்ஸ் முன்பாக அவர் ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் பற்றியும், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் பற்றியும் அடிக்கும் கமெண்ட்கள் அரங்கில் அதிர்வை ஏற்படுத்துகிறது. ரசிகர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் வாட்டர் பாட்டிலை தூக்கி காட்டி, “சொல்லுவது சரிதான்” என்பது போல் ஆமோதிக்கிறார்கள்.

மாளவிகா மோகன்,  ஆஷிகா ரங்கநாத், ரஜீஷா விஜயன், முனீஸ் காந்த், நாசர், ஜீன் பால் லால், ஆஷிஷ் வித்யார்த்தி, யோகி பாபு, அச்சீ த் குமார், அவிநாசி, பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் என்று பெரிய பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறது

படத்திற்கு பெரிய ஹைலைட்  சாம் சி எஸ் பின்னணி இசை  இது அவரது நூறாவது படம். அதற்காகவும் ஒரு ஸ்பெஷல் எபர்ட் போட்டு  படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

எஸ் லஷ்மண குமார் இஷான் சக்சேனா  படத்தை பிரமாண்டமாக தயாரிப்பதற்காக கணக்கு பார்க்காமல் செலவழித்திருப்பது காட்சிகளில் வெளிப்படுகிறது.

ஹாலிவுட் தரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் கேமரா 360 டிகிரி கோணத்தில் சுழன்றிருக்கிறது.

சர்தார் 2 – எதிர்கால பயோ வார் எச்சரிக்கை சிக்னல்…

Review by

K Jayachandhiran

Trendingcinemasnow.com

 

 

Related posts

சிவா, நிக்கி கல்ராணி நடிக்கும் காமெடி பேய் படம் இடியட்

Jai Chandran

ரமலான் இஃப்தார் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Jai Chandran

One 2 One Kick Started Today with Pooja

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend