Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பன் பட்டர் ஜாம் (பட விமர்சனம்)

படம்: பன் பட்டர் ஜாம்

நடிப்பு: புதுமுகம் ராஜு ஜெயமோகன்,  விக்ராந்த்,  ஆதியா, பவ்யா ட்ரிக்கா, சார்லி, மைகேல், சரண்யா, தேவதர்ஷினி, மைக்கேல்  டாக்டர் லங்கேஷ், நிஹாரிகா, விஜே பப்பு,  பாரதி

தயாரிப்பு: சுரேஷ் சுப்பிரமணியம்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: பாபுகுமார்

இயக்கம்: ராகவ் மிர்தாத்

பிஆர் ஓ: ஜான்சன்

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லும் சந்துருக்கு (ராஜு) பெண்கள் என்றாலே பயம். தன்னிடம் அட்ரஸ் கேட்க வரும் நந்தினியிடம்.(பவ்யா) உளறி கொட்டி விட்டு ஓட்டம் பிடிக்கிறார். அவரது அப்பாவித்தனம் நந்தினிக்கு  பிடிக்கவே அவரை காதலிக்க தொடங்குகிறார். ஆனால்  சந்துருவிடம் நெருங்கிய நண்பன் சரவணன் (மைகேல்) சண்டை போட்டு பிரிந்து செல்கிறான் அதற்கு காரணம் நந்தினிதான். இதற்கிடையில் சந்துருக்கு தனது பக்கத்து வீட்டு பெண் மதுவை (ஆதியா) திருமணம் செய்து வைக்க சந்துரு அம்மா ஏற்பாடு செய்கிறார். மதுவோ வேறு ஒருவனை காதலிக்கிறார். இந்த இடியாப்ப சிக்கல் காதல் இறுதியில் என்ன நிலைக்கு வந்து நிற்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்

இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் லூட்டி அடிக்கிறது என்பதை கதை பேசுகிறது. அத்துடன் உண்மை காதல், உண்மை நட்பு, காதல் திருமணம், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம், காதலித்து பிளஸ் பெற்றோர் நிச்சயம் செய்து நடத்தும் திருமணம் என்று பல்வேறு விஷயங்களை இந்த பன் பட்டர் ஜாம் விவாதிக்கிறது.

அறிமுக நாயகன் ராஜு  முதல்படம் போல் இல்லாமல் அனுபவம்  வாய்ந்த நடிகர்போல் இயல்பாக நடித்து கவர்கிறார். அம்மா சரண்யா பேச்சை கேட்டு  குட்டிகரணம் அடிப்பது முதல் நடனம் ஆடுவது வரை செய்து, தான் ஒரு அம்மா பிள்ளை என்பதை நிரூபிப்பது பெண்கள் மனதில் இடம்.பிடித்துக்கொள்கிறார்.

ராஜு,  பவ்யா காதல் சிலுமிசங்கள் இளவட்டங்களை கவரும். இந்த கதாபாத்திரங்களுக்குள் நடக்கப் போகும் திருப்பங்களை முன்கூட்டியே ஓரளவுக்கு யூகிக்க முடிந்தாலும் அது இன்னமும் வேறு திசைகளுக்கு பயணித்து வாழ்க்கை கரையை தொடுவது சுவாரசியம்.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு இன்ஃப்லுயன்ஸர் ஆக ஆசைப்படும் பவ்யா அழகான நடன அசைவுகள் தருவதுடன் அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராஜூவின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா சொந்த மகனிடம் காட்டும் பாசம், கோபம் போல் காட்டி கதாபாத்திரத்தை நிஜமாக்குகிறார். தேவ தர்ஷினியும் அவருக்கு ஈடு கொடுக்கிறார்.  சார்லி அவ்வப்போது சில கமெண்ட்டடித்து சிரிப்பூட்டுகிறார்.

வி ஜே பப்பு  காமெடி காதலனாக வருகிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஆதியா  தொடக்கத்தில் துள்ளலாக நடித்தும் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.

விக்ராந்த் கெஸ்ட் ரோலில் நடித்து அப்ளாஸ் பெறுகிறார்.

சுரேஷ் சுப்பிரமணியம் படத்தை தயாரித்திருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா  இசையில் பாடல்கள் தாளம் போட வைப்பதுடன் முணுமுணுக்க வைக்கிறது. படத்துக்கு பாடலும், இசையும் பலம்

பாபுகுமார்  ஒளிப்பதிவு கலர்ஃபுல்.

ராகவ் மிர்தாத் இன்றைய டிரெண்டுக்கு படத்தை இயக்கி உள்ளார்.  கதையில் அழுத்தம் இருக்கும்  நிலையில் தேவையில்லாமல்  லேப் டாப் முன் அமர்ந்து டிஸ்யூ பேப்பரில் ராஜு கை துடைகும் காட்சியெல்லாம் காட்டுவது அறுவெறுப்பு. ஒரு நல்ல படத்துக்கு இந்த ஆபாசம் தேவையா?

பன் பட்டர் ஜாம் –  குழம்பிக்.கிடக்கும் இளவட்டங்கள் வாழ்க்கையை கடந்து செல்ல  நல்லதொரு  கைடு .

By

ஜெயச்சந்திரன் கே

www.trend

 

 

 

 

 

 

 

 

 

Related posts

இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் கார்டியன்

Jai Chandran

செப் வினோத்குமார் 100 வகை பொங்கல் சாதனை

Jai Chandran

Ram’s love saga soon!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend