Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டி ஜி பி மீது பெண் எஸ் பி புகார் அளித்த வழக்கு: மநீம அறிக்கை

டி ஜி பி மீது பெண் எஸ் பி புகார் அளித்த வழக்கு:  கமலின்  மக்கள் நீதி மய்யம் வெயிட்டுள்ள அறிக்கை:

2021-ம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தபோது, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல் போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து, அவற்றைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியமான வழக்கில், நீதிமன் றத்தில் தாக்கல் செய்த ஆவணங் களே காணாமல்போவது ஏற்புடை யதல்ல. இது, காவல், நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும். எனவே, சம்பந்தப்பட்ட. வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோல நேரிடாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது

Related posts

புதிய படத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ஜோடி

Jai Chandran

Yogi Babu Starrer Sannidhanam (P.O) First Look Revealed

Jai Chandran

கூர்மன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend