Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கேம் ஆப் லோன்ஸ் (பட விமர்சனம்)

படம்: கேம் ஆப் லோன்ஸ்

நடிப்பு: நிவாஸ் ஆதித்தன், அபினய் கிங்கர், எஸ்தர், ஆத்விக் ஜலந்தர்
தயாரிப்பு: என் ஜீவானந்தம்

இசை: ஜோ கோஸ்டா

ஒளிப்பதிவு: சபரி

இயக்கம்: அபிஷேக் லெஸ்லி

பிஆர்ஓ: ஆர்.மணி மதன்

சில சிறிய படங்கள் சமூக பொறுப்புள்ள படங்களாக அவ்வப்போது வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உண்டு. அந்த வரிசையில் கேம் ஆப் லோன்ஸ் தற்கால இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை படமாக வந்திருக்கிறது. அப்படி என்ன இந்த கதையில் கூறிவிட்டார்கள்..

கதை: இளைஞன் டேனியல் (நிவாஸ் ஆதித்தன்) இணையதள சூதாட்டத்துக்கு அடிமையாகிறான். தன்னிடம் இருக்கும் பணம் தீர்ந்த பிறகும் சூதாட்ட மோகம் விட்டு வைக்கவில்லை. இணையதளங்களில் தனித்தனி செயலி மூலம் தெரியாத நபர்கள் கடன் தருவதுண்டு அப்படிப்பட்ட ஒரு செயலியில் டேனியல் கடன் பெற்று சூதாடி கடன்காரனாகிறான். ஒரு கட்டத்தில் கடனை செலுத்த முடியாதபோது இரண்டு மர்ம நபர்கள் அவனது வீடு தேடி வருகிறார்கள் அதன் பிறகு நடப்பது என்ன? என்பதற்கு பரபரப்பான பதில் அளிக்கிறது கிளைமேக்ஸ்.

ஆன்லைன் சூதாட்டம் மூலம் ஏராளமான பேர் பணம் இழந்திருப்பதுடன் தற்கொலையும் செய்து கொண்ட நிகழ்வுகள் பலமுறை நடந்திருக்கிறது. ஒருவழியாக தற்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் புதிதாக தற்போது கடன் தரும் செய்திகள் உருவாகி இருக்கிறது. அதன் மூலம் வரும் பின் விளைவு என்ன என்று தெரியாமலே இளைஞர்கள் கடன்மேல் கடன் பெற்று கடன்காரர்கள் ஆகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலுக்கு உள்ளாகும் ஹீரோ நிவாஸ் ஆதித்தன் ஆன்லைன் கடனில். சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் பயத்தையும், நடுக்கத்தையும் எதிர்காலம் என்வாகுமோ என்ற பீதியையும் தனது நடிப்பின் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தி யோசிக்க வைக்கிறார்.
நிவாஸ் ஆதித்தன் மனைவியாக நடித்திருக்கும் எஸ்தர் தன் கணவர் திருந்தி விட மாட்டாரா என்று ஏங்கி ஏங்கி புழுங்குவது மனதை தொடும் நடிப்பு.
கடன் வசூல் செய்யும் நபராக வரும் அபிநய் நீண்ட காலத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டி இருக்கிறார். எதார்த்தமாக நடிப்பதில் கை சேர்ந்த அபினய்க்கு ஏன்தான் பட வாய்ப்புகள் வருவதில்லைய என்ற ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. இந்த படத்தில் தனது பாத்திரத்தை வில்லத்தனமாக நடித்திருக்கிறாரா, வேற விதமாக நடித்திருக்கிறாரா என்பதை படம் பார்த்து முடிவு செய்யுங்கள். அபினய்க்கு உதவியாளராக வரும் ஆத்விக் ஜலந்தர் நடிப்பும் சோடை இல்லை.

இசை அமைப்பாளர் ஜோ கோஸ்டா  படத்திற்கு பின்னணி இசையில் உயிரூட்டி இருக்கிறார்

வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வை வெகு நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சபரி.

படம் பெரிய பட்ஜெட்டா,.சிறிய பட்ஜெட்டா என்பதல்ல ஏதாவது ஒரு மெசேஜுடன் இருக்கிறதா என்ற பார்வையில்  இந்த கதையை உருவாக்கி படிப்பினை படமாக  இயக்கி அளித்திருக்கிறார் டைரக்டர் அபிஷேக் லெஸ்லி.

கேம் ஆப் லோன்ஸ் – இனி ஆன்லைனில் லோன் வாங்க மாட்டேன் என்று ஒருவர் திருந்தினாலும் அது படத்திற்கு கிடைத்த வெற்றி.

Two And A Half Star Rating Illustration Vector

 

Review by

K.Jayachandhiran

Trendingcinemasnow. com

Related posts

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது திரைப்படம் “கார்பன்” !

Jai Chandran

Sarpatta wins the first round with 1⃣Million Super punches

Jai Chandran

தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ” கருமேகங்கள் ஏன் கலைகின்றன”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend