Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கம்பி கட்ன கதை (பட விமர்சனம்)

படம்: கம்பி கட்ன கதை

நடிப்பு: நட்டி, சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன், கோதண்டம், முத்துராமன், முருகானந்தம், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி

தயாரிப்பு: ரவி

இசை: சதீஷ் செல்வம்

ஒளிப்பதிவு: எம் ஆர் எம். ஜெய் சுரேஷ்

இயக்கம்: ராஜநாதன் பெரியசாமி

பிஆர்ஓ: சைக்

சில வருடங்களுக்கு முன்பு நட்டி நடித்த சதுரங்க வேட்டை படம் வந்து  சக்கை  போடு போட்டது. அதே பாணியில் தற்போது தீபாவளிக்கு திரைக்கு வந்திருக்கும் படம் கம்பி கட்ன கதை.

கதை: விலை உயர்ந்த வைரம் ஒன்றை கொள்ளையடித்து அதை ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்து வைக்கிறார் நட்டி. அந்த ரகசியத்தை சொல்லாததால் அவரை இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கிறார். சில வருடங்கள் கழித்து விடுதலையாகும் நட்டி வைரத்தை புதைத்த இடத்தில் வந்து தேடுகிறார். அந்த இடம் புதுப்பிக்கப்பட்டு ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் நட்டி சாமியார் வேடம் போட்டு அங்கு ஆசிரமம் ஆரம்பித்து தங்கி அங்கிருந்தபடியே வைரத்தை தேடுகிறார். இதற்கிடையில் அவருக்கு பக்த கோடிகள் அதிகமாகிவிடுகின்றனர் . காணாமல் போன வைரம் கிடைத்ததா,
நட்டி போட்ட போலி சாமியார் வேடம் கலைந்ததா என்பதற்கு கலகலப்பாக பதில் அளிக்கிறது படம்.

சதுரங்க வேட்டை நாயகன் நட்டி போலி சாமியார் அறிவானந்தம் என்ற இன்னொரு வேடத்தை இந்த படத்தில் எடுத்திருக்கிறார். அவர் அவர் அடிக்கும் லூட்டி, பணக்காரர்களிடம் செய்யும் மோசடி என்று காட்சிகளை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் கொண்டு செல்கிறது.

தனது சினிமா மார்க்கெட் இறங்கிவிட்டது என்று ஆசி பெற வரும் நடிகையை அந்தரங்க பூஜைக்கு அழைத்து நட்டி செய்யும் சல்லாபம், தன்னை வேவு பார்க்க வரும் ரிப்போர்ட்டரை மைக்ரோ மைக் வைத்து கலாட்டா செய்து அலைய விடுவது, கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை தரும் அரசியல்வாதி முத்துராமனுக்கு பட்டை நாமம் சாத்துவது என்று சலிப்பு தட்டாமல் மோசடிகளை அரங்கேற்றும் நட்டி ஹீரோவாக டபுள் புரமோஷன் பெறுகிறார்.

நட்டிக்கு உதவியாக வரும் சிங்கம்புலி நடிகையின் அம்மாவை கரெக்ட் செய்வதற்காக செய்யும் சேட்டைகள், ராணி என்று நினைத்து பலான பேரிடம் மாட்டிக் கொண்டு நட்டு கழண்டு வரும் காட்சி என குபீர் சிரிப்பு வரவழைக்கிறார்.

50 வயதில் பெயரை மாற்றிக்கொண்டு ஜாவா சுந்தரேசன் ஆக மாறி இருக்கும் காமெடி நடிகர் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் வருவது போல் டிரான்ஸ்லேட்டராக மாறி நக்கல் நையாண்டி செய்து சிரிக்க வைக்கிறார். கோதண்டம் புரியாத பாஷை பேசி மப்பில் உளர்கிறார்.

இரண்டாவது ஹீரோவாக வரும் முகேஷ் ரவி கட்டுமஸ்தான பாடியுடன் இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அடக்கி வாசித்திருக்கிறார்.
நாயகிகள் ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி காதலுக்கும் கவர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கின்றனர்.
சதீஷ் செல்வம் இசை காட்சிகளை மெருகூட்டுகிறது

எம். ஆர். எம். ஜெய் சுரேஷ் கேமரா படத்தை கலர்ஃபுலாக்குகிறது.

மெசேஜ் சொல்கிறேன் பார் என்று எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் படத்துக்கு வந்தோமா கலகலப்பாக சிரித்தோமா ஜாலியாக சென்றோமா என்ற கோணத்தில் கமர்சியல் படத்தை தந்து நான்கு நாள் வசூலுக்கு கேரண்டி தந்திருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி.

கம்பி கட்ன கதை – தீபாவளிக்கு தியேட்டரில் சிரிப்பு வெடி.

 

Review By
K Jayachandhiran

trndingcinemasnow com

Related posts

தமிழ் திரைப் பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி விழாவில் பிரபலங்கள்..

Jai Chandran

Do you want to be a hero? Actress Varalakshmi Gives an Idea

Jai Chandran

விஜய்யை பாராட்டும் அமிர்தா ஓட்டல் மேனேஜ்மென்ட்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend