Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகிழ்ச்சி கொடுக்காத பெட்ரோல் விலை குறைப்பு: கமல் கட்சி வலியுறுத்தல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 அதிகரித்துவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது.

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிய நிலையில் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும்.

அதேபோல, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டும் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2015-ல் ரூ.435-க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது ரூ.1,000-ஐத் தாண்டிவிட்டது.
அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும்.
எரிபொருட்கள் விலையைக் குறைக்காவிட்டால், பணவீக்கம், விலைவாசி உயர்வை மறைக்க மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி..

Jai Chandran

டைட்டில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட முதல்வர்

Jai Chandran

டியூட் படத்திலிருந்து மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend