Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மஹா (பட விமர்சனம்)

படம்: மஹா

நடிப்பு: சிலம்பரசன் டி.ஆர்,  ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா,  கருணாகரன், கஜீத் ஷங்கர், மகத்

தயாரிப்பு: மதியழகன்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு : ஜெ.லக்‌ஷ்மன்

இயக்கம்: யு.ஆர்.ஜமீல்

பி ஆர்ஒ : சுரேஷ் சந்திரா, ரேகா D’ one

மஹா (ஹன்சிகா) பைலட் மாலிக்கை (சிலம்பரசன் டி.ஆர்) காதலிக்கிறார். திருமணத்துக்கு முன்பே மஹா கர்ப்பமாகிறார். இந்நிலையில் மாலிக் விமான விபத்தில் பலியாகிறார். பெண் குழந்தைக்கு தாயாகும் மஹா அன்புடன் வளர்க்கிறார். நகரில் 8 வயதுக்கும் குறைவான சிறுமிகள் காணாமல் போகின்றனர். அவர்களை போதை ம்ருந்து சைக்கோ ஆசாமி கடத்தி மானபங்கப்படுத்தி கொலை செய்கிறான். ஒருநாள் மஹாவின் குழந்தையும் கடத்தப்படுகிறாள். அதிர்ச்சியடையும் மஹா போலீசில் புகார் தருகிறார். போலீஸ் குழந்தையை தேடுகிறது. மஹா குழந்தை கடத்தப்பட்டதுபோல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேத்தியும் கடத்தப்படுகிறாள். தனது குழந்தை காணாமல் போன விஷயத்தில் போலீஸ்  அக்கறை காட்டாத்தால் மஹாவே குழந்தையை தேடுகிறார் அவரால் குழந்தையை கண்டுபிடிக்க முடிந்ததா? போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குழந்தை கதி என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

ஹன்சிகா நடித்துள்ள 50வது படம் மஹா. ஹீரோயின் மையப்படுத்திய கதை என்பதால் படம் முழுவதும் தோளில் சுமக்க வேண்டிய கட்டாயம். பாரத்தையும் மீறி சுமந்திருக்கிறார்.

குழந்தையுடன் மகிழ்சியாக விளையாடி ஹன்சிகாவும் ஒரு குழந்தைபோல் மாறிவிடுகிறார்.

குழந்தை காணாமல்போனதும் பதற்றமடையும் ஹன்சிகா போலீசில் புகார் தருவதும் ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத் துவதால் இவரே தேடுதல் படலத்தில ஈடுபடுவதும் அதற்காக மசூதி, ரெயில்நிலைய .அடையாளத்தை தேடி அலைவதும் சஸ்பென்ஸ்

சைக்கோ கொலைகாரனை அடையாளம் கண்டு அவனது ரகசிய அறைக்குள் புகுந்து அவனுடன் சண்டையிட்டு போராடும் காட்சியில் ஹன்சிகா ஆக்‌ஷன் ஹீரோயினாகி விடுகிறார். கஷ்டங்கள், வலியை தாங்கி நடித்திருப்பது காட்சியில் தெரிகிறது.

சிலம்பரசன் டி.ஆர். கெஸ்ட் ரோலில் வருகிறார் அவரது பாத்திரத்தை கனகச்சிதமாக செய்து அசத்திவிடு கிறார். தொடக்க காட்சியிலேயே வம்பு செய்யும் அடாவடி கும்பலை காரில் சேஸ் செய்து வழி மடக்கி அடித்து துவம்சம் செய்வது ரசிகர்களை விசில் பறக்க வைக்கும். பாடல் காட்சியொன்றில் ஹன்சிகாவுடன் நெருக்கம் காட்டியிருப்பது கிக் அதேப.போல் இதுவரை தனது காதல் விவகாரம் குறித்து வாய்திறக்காத நிலையில் என்னை காதலித்து ஏமாற்றியவரை மன்னித்து எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறுவிட்டேன் என பொடி வைத்து பேசும் காட்சிகள் நிஜத்தின் வெளிப்படாக தெரிகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீகாந்த் பரபரப்புடன் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் ஹன்சிகா வில்லனை அடித்து சாய்த்தபிறகு ஸ்ரீகாந்த் துப்பாக்கியை காட்டியபடி ரகசிய அறைக்குள் சீறியசாக வரும் காட்சி புஷ்வானமாகி விடுகிறது.

தம்பி ராமையா, கருணாகரன் இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர்.

மதியழகன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
ஜெ.லெக்‌ஷ்மன் கலர்புல்.. ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யு.ஆர்.ஜமீல் குழந்தைகள் பாலியல் சீண்டலை அம்பலப்படுத்த எண்ணி உள்ளார். அதை கொஞ்சம் கொடூரமாகவே காட்டியிருப்பது  ஓவர் டோஸாகிவிடுகிறது. சஸ்பென்ஸாக சொல்ல வேண்டும் என்பதற்காக காட்சிகளை எடிட் செய்திருக்கும் விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

மஹா – ஹன்சிகாவின் தூக்கலான நடிப்பும், கிளாமரும் ஜிவ்.

Related posts

இளையராஜா இசையமைப்பில் ” மதுரை மணிக்குறவர்” ரெடி

Jai Chandran

Niroop Nandakumar score applause in Thalaimai Cheyalagam web series

Jai Chandran

கொரோனா பாதிப்பால் நடிகர் பாண்டு காலமானார்.. நடிகர் சங்கம் இரங்கல் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend