Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய விருது வென்ற சூர்யா: விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை உள்ளிட்ட 5 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

சிறந்த திரைப்படம் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர் களுக்கு தேசியவிருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரைப்போற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டிருந்த சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அதே படத்தில் நடித்த அபர்ணா பால முரளி சிறந்த நடிகை விருது பெற்றுள்ளார். .
சிறந்த பின்னணி இசை விருது ஜி.வி.பிரகாஷ் (சூரரைப்போற்று )
சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் சூரரைப் போற்று விருதுகளை வென்றுள்ளது.

“சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது, சிறந்த எடிட்டர் விருது ஸ்ரீகர் பிரசாத், சிறந்த துணை நடிகைக விருது லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கும்ராகியோருக்கு கிடைத்துள்ளது.

மண்டேலா பட இயக்குநர் மடோனா அஸ்வின் சிறந்த வசனகர்த்தா விருது பெறுகிறார். மேலும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறவர்கள் விவரம் வருமாறு:

சிறந்த நடிகர்: சூர்யா (சூரரைப் போற்று ) (தமிழ்)
தன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் (இந்தி); நடிகர்: அஜய் தேவ்கன்

சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று
கதை வசன எழுத்தாளர்: ஷாலினி உஷா நாயர் & சுதாகொங்கரா
சிறந்த வசனகர்த்தா: மடோன் அஷ்வின் (மண்டேலா)

சிறந்த துணை நடிகை: லட்சுமி ப்ரியா சந்திரமவுலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் )
சிறந்த இயக்குநர் :ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு – ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்)
சிறந்த தெலுங்கு படம்: கலர் போட்டோ
சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த மலையாள படம்: திங்கலாச்ச நிச்சயம்
சிறந்த மராத்தி படம்: கோஸ்தா ஏகா பைதானிச்சி
சிறந்த கன்னட படம்: டோலு சிறந்த இந்தி படம்: துளசிதாஸ் ஜூனியர்
சிறந்த பெங்காலி படம்: அவிஜாத்ரிக்
சிறந்த அசாம் மொழிப் படம்: பிரிட்ஜ்

சிறந்த சண்டை காட்சி: அய்யப்பனும் கோஷியும்
சிறந்த நடனம்: நாட்டியம் (தெலுங்கு)
சிறந்த பாடல் : சாய்னா (இந்தி) சிறந்த இசை -ஆலா வைகுந்தபுரமுலு (தெலுங்கு) இசையமைப்பாளர் (பாடல்கள்): எஸ். தமன்
சூரரைப் போற்று (தமிழ்) – இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஜிவி பிரகாஷ் குமார்

சிறந்த ஒப்பனை கலைஞர்: டி.வி.ராம்பாபு (நாட்டியம் தெலுங்கு படம்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் இந்தி படம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: அனீஸ் நாடோடி (கப்பேலா (சேப்பல்), மலையாள படம்.

சிறந்த படத்தொகுப்பு: எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்றும் சில பெண்களும்.

தமிழ் படம் சிறந்த ஒலிப்பதிவு: ஜோபின் ஜெயன் (டோலு (கன்னடம்);
லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் (ஒத்திசைவு ஒலி படங்களுக்கு மட்டும்) அன்மோல் பாவே (மி வசந்தராவ் ஐ ஆம் வசந்தராவ் (மராத்தி படம்)
விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ சங்கர் (மாலிக் – மலையாள படம்; இறுதிக்கலவை டிராக்கின் மறுபதிவு

தேசிய விருது வென்ற சூர்யாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

Related posts

Vijay’s BeastTrailer Releasing Tomorrow 6 PM

Jai Chandran

ஜனவரி 10ல் ஷங்கரின் கேம் சேஞ்சர் ரிலீஸ்

Jai Chandran

உடன்பால் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend