Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயல் இசை நாடக மன்ற தலைவராக சந்திரசேகர் நியமனம்

தமிழ்நாடு இயல், இசை. நாடக மன்றத்தின் தலைவராக இசை அமைப்பாளர் தேவா இருந்து வந்தார். அவரது  பதவிக் காலம் முடிந்ததையடுத்து, புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டார். இதனை  தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட  ஆணையில் குறிப்பிட்டுள்ளார். மேலும்
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் என  முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் குறிப்பிட்டுள்ளதாவது:
வாகை சந்திரசேகர் தமிழ்த் திரைப்படத் துறையில் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த காரணத்தால், இவரது நடிப்பாற்றலைப் பாராட்டி, 1991 ஆம் ஆண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் இவருக்கு “கலைமாமணி விருது” வழங்கிச் சிறப்பித்தார். அதோடு மட்டுமல்லாமல், 2003 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான “தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்  வாகை சந்திரசேகர். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர்-செயலராகப் பதவி வகித்து, சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.
அதோடு, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2016 முதல் 2021 வரை அந்தத் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முதல்வர் கூறி உள்ளார்.

Related posts

பொன்னியின் செல்வன்போல் படம் எடுக்க இன்னொருவர் பிறந்துவரணும் – கார்த்தி பேச்சு

Jai Chandran

Naai Sekar Teaser

Jai Chandran

குள்ள நடிகருடன் இணைந்து நடிக்கும் “லவ் டுடே” இவானா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend