Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அன்பு ரகுமான்! அஞ்சற்க..வைரமுத்து ஆறுதல்..

தமிழ். இந்தி, ஆங்கில படங்களுக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம் டாக் மில்லினர் ஹாலிவுட் படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் தட்டி வந்து இந்தியா வுக்கு முதன்முறையாக ஆஸ்கர் கொண்டு வந்தவர் என்ற பெருமையை பெற்றுத் தந்தார்.
சில வருடங்களுக்கு முன்புவரை இந்தி படங்களுக்கு இசை அமைக்க கேட்டு பாலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பா ளர்கள் ரஹ்மான் வீட்டுக்கு படையெடுத் தனர். இது அங்குள்ள இசை அமைப்பாளர் களுக்கு நெருக்கடியை கொடுத்தது. ரஹ்மானுக்கு எதிராக புரளி கிளப்ப ஒர் கூட்டம் கிளம்பியது. அவருக்கு எதிராக வதந்தி பரவவிட்டு ரஹ்மானுக்கு வரவேண்டிய வாய்ப்புகளை பறிக்கப் பட்டு அங்குள்ள இசை அமைப்பாளர் களுக்கு அளிக்கப்பட்டது.

ரஹ்மானுக்கு 2020ம் ஆண்டில் இந்தி பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிட்டன. சொல்லப் போனால் தனது சொந்தபடம் ஒன்றுக்கும் அட்ராங்கி ரே என்ற மற்றொரு படத்துக்கு மட்டுமே இந்தியில் இசை அமைக்கிறார்.
தனக்கு எதிராக இந்தி திரையுலகில் ஒரு கூட்டம் வேலை செய்கிறது, என்னைப் பற்றி வதந்தி பரப்புகின்றனர் என்று ஏஆர். ரஹ்மான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். இது பரபரப்பானது.
ரஹ்மானின் பேட்டி பற்றி அறிந்து அவருக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஆறுதலாக வீடியோ வெளியிட்டிருக் கிறார். அத்துடன் டிவிட்டர் மெசேஜும் வெளியிட்டிருக்கிறார்.
அதில் வைரமுத்து கூறியிருப்பதாவது:
அன்பு ரகுமான்!
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை
இவ்வாறு வைரமுத்து கூறி உள்ளார்.

Related posts

தயாரிப்பாளர்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

Jai Chandran

விஜய் ஆண்டனி, சத்யராஜ் “வள்ளி மயில்” ஷூட்டிங்தொடக்கம்

Jai Chandran

CHENNAI DOCTOR TOPS THE WORLD

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend