நடிகர் விஷாலும் அவரது தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதுபற்றி வெளியில் சொல்லாமல் அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து அதில் இருவரும் குணம் அடைந்திருக்கின்றனர். இது குறித்த தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து மெசேஜ் வெளியிட்டிருக்கிறார் விஷால்.
அதில்,’ எனது தந்தைக்கு கொரேனா தொற்று உறுதியானது உண்மை. அவருக்கு உதவியபோது எனக்கும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்று அறிகுறிகள் தெரிந்தது. எனது மேலாளருக்கும் தொற்று அறிகுறி இருந்தது. மூன்று பேரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டோம், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டி விட்டோம். தற்போது நலமாக உள்ளோம். இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என கூறியிருக்கிறார் விஷால்
’சக்கரா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஷால். எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ ஷங்கர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை. கடந்த மாதம் இதன் டிரெய்லர் வெளியானது.
துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கினுடன் தகராறு ஏற்பட்டதால் அந்த படத்தை விஷாலே இயக்கி நடிக்கிறார்.