ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, வேலைக் காரன் போன்ற படங்களில் நடித்தவர் சரத்பாபு. கமலுடனும் சலங்கை ஒலி லஉள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர உச்சகட்டம், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல படஙகளில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு, மலையாள போன்ற மொழிகளில் அதிக படங்களில் நடித்து உள்ளார்.
71 வயதான நடிகர் சரத்பாபுவுக்கு சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயல் இழந்து வந்தன. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து வந்தனர்.
ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாக கருவி உதவியுடன் சிக்கை அளிக்கப்பட்டது. ஆனாலும் சரத்பாபு நேற்று (மே 22) சிகிச்சை பலனின்றி காலமானார்..
சரத்பாபுவின் உடல் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. தெலுங்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் வேனில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இந்நிலையில் தி.நகரில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சரத்பாபு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்குரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர் களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,
“சரத்பாபு நடிகர் ஆவதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்கள். நடிகர் சரத்பாபுவின் மறைவு மிகவும் வேதனைய ளிக்கிறது. மிகவும் அருமையான மனிதர், நல்ல நண்பர், என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் சரத்பாபு. நாங்கள் இணைந்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்கள்.
படப்பிடிப்பில் நான் சிகரெட் பிடித்தால் என்னிடம் கடிந்து கொள்வார். சிகரெட்டை பிடுங்கி கிழே போட்டு அணைப்பார். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடு கின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப் படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.
அவருக்கு என் அஞ்சலி.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல்:
தமிழ்த்திரைப்பட நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக் கிறது.
1977 ஆம் ஆண்டு “பட்டினிப்பிரவேசம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரை யுலகில் அறிமுகமான பல்துறை நடிகரும் எளிமையாக பழகக் கூடிய குணச்சித்திர நடிகரான சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்தவர்.
தமிழ் திரைப்படங்களில் வேடன், மகாபிரபு, கேப்டன் போன்ற திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங் களை நினைவுகூறு கிறேன்.
தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்துடன், ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் சரத்பாபு அவர்களின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க் கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.
சரத்பாபு மறைவுக்கு பிரதமர் மோடி, ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் முக.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த்p, பா ஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
