படம்: லால் சலாம்
நடிப்பு: ரஜினிகாந்த் (கவுரவ வேடம்), விஷ்ணு விஷால், விக்ராந்த், கே எஸ்.ரவிகுமார், லிவிங்ஸ்டன், ஜீவிதா, தம்பி ராமையா, நிரோஷா, தங்கதுரை,
தயாரிப்பு: லைகா புரடக்ஷன் சுபாஷ்கரன்
தலைமை தயாரிப்பு நிர்வாகம்: ஜி கே எம் தமிழ்குமரன்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு: விஷ்ணு ரங்கசாமி
இயக்கம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்
ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்
கடலூர் பகுதியில் மூரார்பாத் ஊரில் இந்துக்களும், முஸ்லிம் களும் சகோதரர்கள்போல் வாழ்கி றார்கள். அப்பகுதியில் முஸ்லிம் களின் ஓட்டுக்கள் தங்களுக்கு வரவில்லை என்று எண்ணும் அரசியல் கட்சி எப்படியாவது அப்பகுதியில் உள்ள ஓட்டுக்கள் தங்கள் கட்சிக்கு வருமாறு செய்வ தற்கு தீவிர சதி வேலையில் ஈடுபடுகிறார்கள். பக்கத்து ஊரிலி ருந்து வரும் தேரை கொண்டு வந்துத்தான் மூரார்பாத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா நடக்கும் நேரத்திலேயே “தங்கள் ஊர் தேரை இனி நீங்கள் பயன்படுத்தக் கூடாது” என்று விவேக் பிரசன்னா தங்கள் ஊருக்கு தேரை இழுத்துச் செல் கிறார். அதை தம்பி ராமையா தட்டிக் கேட்கும்போது, ” முடிந்தால் உங்கள் தேரை வைத்து திருவிழா நடத்திக் கொள்ளுங்கள்” என்று சவால் விடுகிறார். இதற்கிடையில் மூரார்பாத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்து இளைஞர்கள் ஒருபுறமும் முஸ்லிம் இளைஞர்கள் ஒரு பபுறமும் அணியாக பிரிந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதில் மீண்டும் விவேக் பிரசன்னா புகுந்து தகராறு ஏற்படுத்தி ஊரில் இந்து முஸ்லிம் கலவரத்தை பரவச் செய்கிறார். இதில் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீன் (விக்ராந்த்) கை துண்டாகிறது. அதை திரு (விஷ்ணு விஷால்) தான் செய்தார் என்று அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இது பெரும் பகையாக உருவெடுக்கிறது. தன் கையை வெட்டிய திருவை பழிவாங்கியே தீர வேண்டும் என்று சம்சுதீன் கோபம் காட்டுகி றான். அதை தன் தந்தையிடம் சொல்லி செய்யக் கேட்கிறான். மொய்தீன் மகனின் பேச்சை கேட்டாரா? தன் மகன் கையை துண்டாக்கிய திருவின் உயிரை எடுத்தாரா? ஊரில் ஏற்பட்ட மத கலவரத்துக்கு முடிவு கட்டினாரா? என்ற பல்வேறு முக்கிய கேள்வி களுக்கு கிளைமாக்ஸ் மத நல்லிணக்க உத்வேகத்துடன் பதில் அளிக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படம் இப்படிப்பட்ட கதையாகத்தான் இருக்கும் என்று ஒரு அனுமானம் முன்னரே இருந்தது, அந்த அனுமானத்தை ஆணி அடித்தது போல் உறுதி செய்திருக்கிறது படத்தின் கிளைமாக்ஸ்.
மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் படத்தின் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை அவரது காட்சிகள் வரும்படியாக எடிட்டிங் செய்திருப்பது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புத்திசாலித்தனம்.இந்து, முஸ்லிம் கருத்தை இவரைத் தவிர வேறு எவர் சொல்லியிருந்தாலும் அது எடுபடுமா என்பது சந்தேகம்தான். சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ரஜினிகாந்தின் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் உயிர் பெற்று எழுந்து நிற்கிறது.
ஜீவிதாவின் கணவர் இறந்ததும் அங்கு சடங்குகளை செய்யும் அவரது குடும்பத்தினருக்கு அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது அங்கு வரும் மொய்தீன் பாய் ரஜினி காந்த் “அவங்க முறைப்படித்தான் சடங்குகள் நடக்கும் அதை பொறுத்துக் கொள்பவர்கள் இங்கு இருக்கலாம் இல்லாதவர்கள் இடத்தை விட்டு செல்லலாம்”: என்று போடும் உத்தரவில் ஒரு சகோதர கோபம் வெளிப்படு கிறது.
அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் தேர் திருவிழா நடத்துவதற்காக முஸ்லிம்கள் சந்தனக்கூடு விழாவிற்காக பயன்படுத்தும் தேரை ஊருக்கு கொண்டு வந்து நிறுத்தி இந்துக் களின் தேர்த்திருவிழாவை கொண்டாட ரஜினிகாந்த் ஏற்பாடு செய்வதும் அந்த தேரில் அம்மனின் சிலையை தானே தோளில் சுமந்து சென்று வைப்பதும் இப்படி ஒரு காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய நடிகரால் சொல்லப் பட்டதா என்பது சந்தேகம் தான். அதை ரஜினிகாந்த் சொல்லியிருப்பது மதமாச்சார்யங்களை ஏற்படுத்தி தேர்தலில் ஓட்டு அறுவடை செய்ய வரும் மதவாத கூட்டத்திற்கு சவுக்கடி தரும் காட்சி. இக்காட்சியை இவ்வளவு துணிச்சலாக ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கி இருப்பது அவரது சமூக சிந்தனையை வெளிப் படுத்துகிறது, இதற்காக ஐஸ்வர்யா ரஜினிக்கு பெரிய அப்ளாஸ் தரலாம்..
மும்பையில் நடக்கும் இந்து முஸ்லிம் கலவரத்தில் விக்ராந்தும், விஷ்ணு விஷாலும் சிக்கிக் கொள்ள அவர்களை யார் காப்பாற்றுவார்கள் என்று பதற்றமான சூழல் ஏற்படும் நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வரும் இரும்புச் சங்கிலி கலவரக் காரர்களை அடித்து துவம்சம். செய்யும்போது இதோ வந்து விட்டார் சூப்பர் ஸ்டார் என்ற கரகோஷம் அரங்கில் விசில் சத்தமாக பறக்கிறது.
விஷ்ணு விஷால் திரு என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாக நடித்திருப்பதுடன் கிரிக்கெட் வீரரா கவும் அனல் பறக்கச் செய்கிறார். அதேபோல் விக்ராந்த் முதலில் சில காட்சிகள் வந்தாலும் இடையில் காணாமல் போய்விடுகிறார் அவரது கதையை முடித்து விட்டார் களோ என்று எண்ணும் நிலையில் மீண்டும் உயிர் கொடுத்து உணர்வப் பூர்வமாக செய்து மனதில் இடம் பிடிக்கிறார். நீண்ட நாளுக்கு பிறகு ஜீவிதா இப்படத்தில் விஷ்ணு விஷாலின் தாயாக வந்து இவரால் இப்படி கூட நடிக்க முடியுமா என்று புருவத்தை உயரச் செய்கிறார். மீண்டும் பல படங்களுக்கு வாய்ப்பு தேடி வருவதற்கான அச்சாரத்தை போட்டிருக்கிறார்.
காமெடியாக வந்து சென்று கொண்டிருந்த விவேக் பிரசன்னா இதில் வில்லத் தனத்தில் வில்லங்கம் செய்து கடுப்பேற்றுகி றார்
கே எஸ். ரவிக்குமார் , தம்பி ராமையா செந்தில், தங்க துரை உள்ளிட்டவர்கள் யாரும் சோடை போகவில்லை.
லைகா புரதக்ஷன் சுபாஷ்கரண் படத்தை தயாரித்திருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் தலைமை தயாரிப்பு நிர்வாகி ஜி கே எம் தமிழ் குமரன் தயாரிப்பு நிர்வாக பொறுப்புகளை செய்திருக்கிறார்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் முற்றிலுமாக தனது பாணியை மாற்றி ஊர் பக்க திருவிழா பாடல், காதல் பாடலாக வெவ்வேறு பரிணாமத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார், காட்சிகள் பிரம்மாண்டமாக திரையில் தெரிய பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார்.
விஷ்ணு ரங்கசாமி. இப்படக் கதை எழுதி இருப்பதுடன் ஒளிப்பதிவையும் திறம்பட செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னால் இவ்வளவு கனமான கதையை பிசகு இல்லாமல் இயக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
லால் சலாம் – மத அரசியல் வியாபாரிகளுக்கு சவுக்கடி..