படம்: இ மெயில்
நடிப்பு: ராகினி திவேதி, முருகா அசோக், மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பில்லி முரளி, ஆர்த்தி ஶ்ரீ, மிட்டாய் பிரபா, ஆதவ் பாலாஜி,
தயாரிப்பு: எஸ் ஆர் பிலிம் பேக்டரி எஸ் ஆர்.ராஜன்
இசை: அவினாஷ் கவாஸ்கர், ஜூபின்
ஒளிப்பதிவு: முத்தப்பன்
இயக்கம் : எஸ். ஆர்.ராஜன்
பி ஆர் ஒ: A. ஜான்
ராகினி தி வேதியும் அவரது தோழிகளும் வீடு வாடகை எடுத்து தங்கி இருக்கின்றனர். ராகினி ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறார். அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் முருகா அசோக்கிடம் தெரிந்த இடத்தில் வேலை இருந்தால் சொல்லச் சொல்லி கேட்கிறார். அவரும் சொல்வதாக கூறுகிறார். இதற்கிடையில் ராகினி திவேதி செல்போனில் கேம் ஆடுகிறார். அதில் அவரது செல் எண் மற்றும் பெயர் பதிவு செய்கிறார். கேம் ஆடிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு கொரியரில் லட்ச லட்சமாக பணம் கிடைக்கிறது. அவர் அதைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து வீடியோ கேம் ஆடுகிறார். பின்னர் அந்த கேமில் சொல்லும் ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு ஒரு நபர் இறந்து கிடக்க அந்த பழி ராகினி மீது விழுகிறது. . என்ன செய்வ தென்று புரியாமல் தவிக்கும் அவருக்கு அசோக் உதவுவதாக கூறுகிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிக்கின்றனர். அப்போதும் ராகினிக்கு மர்ம நபர் போன் செய்து மிரட்டுகிறார். ஒரு சமயம் முகமூடி அணிந்த ஆள் நேரடியாக வீட்டுக்கு வந்து ராகினியை கொல்ல முயற்சிக்கிறான்.. அதிலிருந்து அவர் தப்பித்து முருகா அசோக்குடன் வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்து செல்கி றார். ஆனாலும் அவருக்கு ஆபத்து தொடர்கிறது. ஒரு கட்டத்தில் மனதில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு தன்னை துரத்துவது யார்? தன்னை கொலை செய்ய முயற்சிப்பது யார்? என்ற கேள்விகளுக்கு விடை காண அவரே நேரடியாக களத்தில் இறங்குகிறார். அப்போது பல எதிர்ப்புகளையும் தாக்குதலையும் அவர் சந்திக்க வேண்டி இருக் கிறது. ராகினி கையில் கிடைக்கும் ஹார்ட் டிஸ்க் ஒன்றை கேட்டு மர்ம கூட்டம் அவரை மிரட்டுகிறது. அவர்களிடம் அவர் அந்த ஹார்ட் டிஸ்கை கொடுத்தாரா? அதில் என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது? என்பதற்கெல்லாம் இமெயில் பட கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
கன்னட பட கதாநாயகி ராகினி திவேதி இமெயில் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். படம் முழுக்க அவரைச் சுற்றியே கதை பின்னப் பட்டிருக்கிறது.
தொடக்கத்தில் மனோபாலா ரியல் எஸ்டேட் அலுவலகம், பிளாட் விற்பது என்று ராகினி திவேதி வேடிக்கையாக சில காமெடி காட்சிகளில் நடிக்கிறார். பின்னர் வீடியோ கேம் ஆட தொடங்கியதும் அவருக்கு ஆபத்துக்கள் பின் தொடர்வது கதையை விறுவிறுப் பாக்குகிறது
தனக்கு தெரிந்த இடத்தில் வேலை வாங்கித் தர அசோக்கிடம் ராகினி கேட்பதும் பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதும் எதிர்பார்க் காத காட்சி. ஆனால் அவருக்கு எப்போது திருமணம் நடந்தது என்று தான் தெரியவில்லை ஆனால் ராகினி அசோக்கை என் ஹஸ்பண்ட் என்று கூறத் தொடங்கி விடுகிறார்.
ராகினி திவேதியை மர்ம நபர் தாக்க அவரை எதிர்த்து தாக்கி ராகினி அதிரடி ஆக்சன் காட்டு கிறார். அவருடன் சேர்ந்து முருகா அசோக் மர்ம நபரை தாக்குகிறார். அதன் பிறகு கதை ஆக்ஷன் களத்துக்குள் புகுந்து விடுகிறது.
ராகினி தன்னை கொலை செய்ய வந்தது யார் என்பதை கண்டு பிடிக்க விஜயசாந்தி பாணியில் ஆக்சன் களத்தில் குதித்து தாறுமாறாக சண்டையிட்டு அதிரடி காட்டுகிறார். திடீரென்று ராகினி திவேதியை ரவுடி கூட்டம் கடத்திச் சென்று கட்டி வைத்து மிரட்டுவதும் அவர்களுக்கு க்ளு கொடுத்து ஹார்ட் டிஸ்க் இந்த இடத்தில்தான் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் அந்த இடத்திற்கு சென்று ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்ததும் அது போலி என்பது தெரியவர மீண்டும் ராககினியின் தலைக்கு துப்பாக்கி வருகிறது. இப்படியே காட்சி மாறி மாறி சீன் கிளைமாக்சை நெருங்கி விடுகிறது.
கிளைமாக்ஸ் நெருக்கத்தில் தான் ராகினி திவேதியை இந்த அளவுக்கு ஆட்டம் காட்டியது முருகா அசோக் என்பது தெரிய வருகிறது. இந்த சஸ்பென்ஸ் உடையும் வரை கதையில் விறுவிறுப்பு குறையவில்லை. சஸ்பென்ஸ் உடைந்த பின்பும் விறுவிறுப்பு மேலும் கூடி விடுகிறது.
ராகினி திவேதியை காதலிபது போல் நடிக்கும் முருகா அசோக் யாருக்காக வேலை செய்கிறார் என்பதும் இன்னொரு சஸ்பென்ஸ் முடிச்சு.
ராகினி திவேதியுடன் போஜ்புரி மற்றும் இந்தி நடிகைகள் ஆர்த்தி ஸ்ரீ உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட நடிகைகள் கொல குத்து கவர்ச்சி ஆட்டம் போட்டு இளவட்டங்களை மயக்கத்தில் ஆழ்த்துகின்றனர்.
அந்த ஆட்டத்தை முழுமையாக ரசிக்க விடாமல் சென்சார் பளிச்சென்று விளக்கு அடித்து கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டுகிறது.
மேலும் ஆதவ் பாலாஜி, மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா பில்லி முரளி, மனோபாலா லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடித்திருக் கிறார்கள்.
எஸ் ஆர் ஃபிலிம் பேக்டரி சார்பில் எஸ். ஆர். ராஜன் இப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். பி அண்ட் சிக்கேற்ற படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கி றார். அதேசமயம் செல்போனில் வீடியோ கேம் ஆடுவதால் என்னென்ன ஆபத்துகள் வருகிறது என்பதையும் எச்சரிக்கை மணியாக படத்தில் கருவாக அமைத்திருப்பது கேம் ஆடி சீரழியும் இளவட்டங்களுக்கு ஒரு பெரிய விழிப்புணர்வு.
கன்னடத்தில் பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முத்தப்பன் இப்படத்துக்கு ஒளிப் பதிவு செய்துள்ளார். காட்சிகளை பளிச்சென தெளிவாக கண் களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்.
அவிநாசி கவாஸ்கர் பாடல்களுக்கு இசையமைக்க திரௌபதி பட புகழ் ஜுபின் பின்னணி இசை அமைத் திருக்கிறார்.
இமெயில் இளவட்டங்களுக்கு கவர்ச்சி பிளஸ் ஆக்சன் விருந்து.