Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வெப்பம் குளிர் மழை ( பட விமர்சனம்)

படம் வெப்பம் குளிர் மழை

நடிப்பு: திரவ், இஸ்மத் பானு, ரமா, எம் எஸ் பாஸ்கர், மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் அபிபுல்லா , விஜயலட்சுமி

தயாரிப்பு:  திரவ்

இசை: சங்கர் ரங்கநாதன்

ஒளிப்பதிவு: பிருத்வி ராஜேந்திரன்

இயக்கம்: பாஸ்கல் வேதமுத்து

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

திருமணம் ஆகி சில மாதங்களி லேயே கர்ப்பம் ஆகாத பெண் ணுக்கு மலடி என்று பட்டம் சூட்டிவிடுவார்கள்  அப்படித்தான் பெத்த பெருமாள் ( திரவ்,) பாண்டி (இஸ்மத் பானு) தம்பதிக்கும் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் வீட்டில் பிரச்சனை தலை தூக்கு கிறது. ஊரில் பெத்த பெருமாளை குழந்தை பெற லாயக் இல்லாத வன் என்று தூற்றுகிறார்கள். வீட்டில் மருமகளை மலடி என்று மாமியார் தூற்றுகிறார். தங்கள் உடலில் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதிக்க மருத்துவம னைக்கு தம்பதிகள் செல்கின்றனர் அதன் பிறகு நடப்பது என்ன? இவர்களுக்கு குழந்தை பிறந்ததா? ஊரார் இவர்களின் ஜோடியை ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதற்கெல்லாம் வெப்பம் குளிர் மழை படம் பதில் அளிக்கிறது.

அந்த காலத்தில் வீட்டிற்கு ஐந்து பிள்ளைகள், எட்டு பிள்ளை ஏன் 16 பிள்ளைகள் கூட பெற்றிருக்கி றார்கள் ஆனால் இந்த காலத்தில் ஒரு குழந்தைக்கு வழியில்லாமல் பல தம்பதிகள் தவிக்கின்றனர் அப்படி ஒரு தம்பதியின் கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளின் மனக்குமுறலை திரவ், இஸ்மத் பானு இருவரும் கொட்டி தீர்த்திருக்கிறார்கள்.
தங்களுக்கு குழந்தை இல்லையே என்று இருவரும் அறைக்குள் தனிமையில் அழுது புலம்புவதும் பின்னர் தங்களை தாங்களே தேற்றிக் கொள்வதும் மனம் ஒத்த தம்பதிகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றனர்.

குழந்தை இல்லாதது ஏன் என்பதை பரிசோதிக்க திரவ் மனைவியுடன் மருத்துவமனைக்கு செல்வதும் அங்கு கையில் ஒரு டப்பாவை கொடுத்து இதில் போய் உயிரணுக்களை எடுத்து வா என்று ஒரு நர்ஸ் கூறியதும் அதிர்ச்சி அடையும் திரவு அந்த நர்சை தீட்டி தீர்ப்புது அரங்கை கலகலபாக்குகிறது.

கணவனுக்கு குழந்தை பெறும் சக்தி இல்லை என்பது தெரிந்ததும் இஷ்மத் பானு எடுக்கும் ஒரு முடிவு படத்தின் கதையை திருப்பி போடுகிறது.

ஊர் வம்புகளை பேசித் திரியும் ஊர் பெரியவராக எம்.எஸ் பாஸ்கர் தனது இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்
மாமியாராக ரமா தன் பங்குக்கு மருமகளுடன் சண்டையிட்டு காட்சியை வெப்பமாக்குகிறார்.

படத்தில் வரும் இன்னும் பல்வேறு கதாபாத்திரங்கள் கிராமப்புறங்க ளில் ஊர் மக்கள் அன்றாடம் பார்க்கும் நபர்களின் நடமாட்டம்.

படத்தை தயாரித்திருப்பதுடன் ஹீரோவாக நடித்திருக்கிறார் திரவ்.

பாஸ்கல் வேதமுத்து தன் உறவினர் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு சில புரிதல்கள் இயக்குன ருக்கு இருந்தாலும் அதை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சிகளில் விளக்கம் அளிக்காதது  குறை. ஆனால் இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற அவரது ஆர்வம் பல தம்பதிகளின் வாழ்வில் புது ஒளியை ஏற்றி வைக்கும்.

சங்கர் ராஜேந்திரன் இசையில் ஒலிக்கும் பாடல்களில் அர்த்தமுள்ளது.

பிரித்திவ்  ராஜேந்திரன் ஒளிப்பதிவு படத்தை நிஜ காட்சிகளாக கண் முன் நிறுத்துகிறது.

வெப்பம் குளிர் மழை –  குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகளுக்கான தீர்வு.

Related posts

800 உலக நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

Jai Chandran

SRK – Deepika Performed Dance at Jawan Success Meet

Jai Chandran

Actress AthulyaRav

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend