படம்: பூமர் அங்கிள்
நடிப்பு: யோகிபாபு ஓவியா, பாலா, சேஷு, தங்கதுரை, ரோபோ சங்கர், சோனா, மதன்பாபு
தயாரிப்பு அங்கா மீடியா
இசை:சாந்தன், தரம்பிரகாஷ்
ஒளிப்பதிவு: சுபாஸ்.தண்டபாணி
இயக்கம்: சுவாதேஷ் எம் எஸ்.
பி ஆர் ஒ: A ஜான்
வெளிநாட்டு பெண்ணை கட்டிக் கொள்ளும் யோகி பாபு அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். இதற்கிடையில் அவரை ஊரில் உள்ள அரண் மனைக்கு அழைத்துச் சென்று திரும்பி வந்த பிறகு விவாகரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று வக்கீல் யோசனை சொல்ல அதை ஏற்று யோகி பாபு அரண்மனைக்கு வருகிறார். சிறுவயதில் தங்களுக்கு மாத்திரை கொடுத்து தங்கள் வாழ்க்கையை பாழாக்கிய யோகி பாபுவை பழி தீர்க்க 3 நண்பர்கள் முடிவு செய்து அரண்மனைக்குள் நுழைகி றார்கள். அதேபோல் பஞ்சாயத்து தலைவரும் அரண்மனைக்கு வருகிறார். யோகி பாபுவின் தந்தை பெரிய விஞ்ஞானி, அவர் கண்டுபிடித்த புதுவித கருவி ரகசியத்தை கைப்பற்றுவதற் காகவே யோகி பாபுவின் வெளிநாட்டு மனைவி அந்த இடத்திற்கு வந்த ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. அடுத்து நடந்தது என்ன என்பதற்கு எந்த லாஜிக்கும் இல்லாமல் படம் கலகலப்பு ஒன்றையே நோக்கமாக வைத்து கிளைமாக்ஸ் நோக்கி செல்கிறது.
குழந்தைகளுக்கான ஒரு காமெடி படத்தை தர வேண்டும் என்பதற் காக இயக்குனர் கையில் எடுத்த கதைதான் பூமர் அங்கிள். இந்த அங்கிலும் எப்போது வருவார் என்று தெரியாமல் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் கிளைமாக்சில் வந்து நிற்கிறார்.
சேஷு, ரோபோ சங்கர் தங்கதுரை மூவரும் யோகி பாபுவுக்கு கை கொடுக்கும் விதமாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சந்திரமுகி, மதராசபட்டினம் படங்களின் கதையை உல்டா புல்டா செய்து எப்படியாவது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று பெரும்பாடு பட்டு காட்சிகளை நகர்த்தி இருக்கி றார்கள். அது ஒரு சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
யோகி பாபு ஹீரோ மற்றும் காமெடியனாக இருந்தாலும் சிரிப்பை தூண்டிவிட கிச்சு கிச்சு மூட்டும் முக்கிய காமெடியனாக எடுத்திருக்கிறார் சேஷு. ஹாலிவுட் வில்லன் ஜோக்கர் பாணியில் மேக்கப் அணிந்து கொண்டு படம் முழுவதும் அவர் தன்னால் இயன்ற ஆக்சன் காமெடியை செய்து சிரிக்க வைக்கிறார்.
பாலா, தங்கதுரை, ரோபோ சங்கர் ஆகியோர் ஹாலிவுட் சூப்பர் மேன், ஹல்க், ஸ்பைடர் மேன் போன்ற கெட்டப்பில் ரகளை செய்கின்றனர். தொடக்கம் முதல் இறுதி வரை இவர்களின் சத்தமும் கூச்சலும் தான் அரங்கை நிரப்புகிறது.
ரிலாக்ஸ் மூடில் ரசிகர்களை வைப்பதற்காக ஓவியா கவர்ச்சி எனட்ரி தருகிறார். ஒரு கவர்ச்சி பாடல், ஒரு ஆக்ஷன் காட்சி என்று தொடக்கத்திலும் இறுதியிலும் வந்து இளவட்டங்களை கிளுகிளுப்பாக்குகிறார் ஓவியா.
அங்கா.மீடியா படத்தை தயாரித்து இருக்கிறது.
சுவாதேஷ் எம் எஸ் படத்தை எங்கேஜ் ஆக வைக்கிறேன் என்ற பெயரில் காட்சிகளை பலவாறு உருட்டி புரட்டி எடுத்து அலற விடுகிறார்.
சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு இயல்பு.
சாந்தன் தரம் பிரகாஷ் இசை காட்சிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
பூமர் அங்கிள்- குழந்தை களுக்காக..
,