Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

B P 180 {பட விமர்சனம்)

படம்: B P 180

நடிப்பு: டேனியல் பாலாஜி, அருள் தாஸ், தானியா ரவிச்சந்திரன், தமிழ்

தயாரிப்பு: பிரதிக் டி சாட்பார், அதுல் எம் போஸமியா,

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: ராமலிங்கம்

இயக்கம்: ஜெ பி

பிஆர்ஓ:
சுரேஷ் சந்திரா, (D’One), அப்துல் ஏ நாசர்

காசிமேடு அர்னால்டு (டேனியல் பாலாஜி) அந்தப் பகுதி தாதாவாக உலா வருகிறார். என்னதான் ரவுடியாக இருந்தாலும் மூத்தவர் பாக்யராஜிடம் தனி மரியாதை வைத்திருக்கிறார். ஒரு விபத்தில் பாக்யராஜ் மகள் இறந்து விடுகிறார். மகள் உடலை எந்தவித பிரேத பரிசோதனையும்  செய்யாமல் தன்னிடம் தரும்படி டாக்டரிடம் வேண்டுகிறார் பாக்யராஜ். அதேபோல் ரவுடி அர்னால்டும் டாக்டர் தானியாவை பிரேத பரிசோதனைசெய்யக்கூடாது என்று மிரட்டுகிறார். தனக்கு வரும் எதிர்ப்புகளை மீறி பாக்யராஜ் மகள் உடலை பிரேத பரிசோதனை செய்து உடலை தருகிறார் தான்யா. கோபமடைந்த அர்னால்ட் தானியாவையும் அவரது சொந்தங்களை நட்புக்களையும் வரிசையாக கொல்ல முடிவு செய்து அடியாட்களை அனுப்புகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு படு வேகமாக பரபரப்புடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

மறைந்த டேனியல் பாலாஜி நடித்திருக்கும் படம் BP 180. இது டேனியல் பாலாஜிக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்போல் உள்ளது. கதையே இவரை சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது. வில்லன் வேடமென்றால் இவரது நடிப்பு வேறு மாதிரியாக இருக்கும். ஒரு சில படங்களில் ஹீரோவை கூட தனது நடிப்பால் காலி செய்து விடுவார் டேனியல் பாலாஜி. இந்தப் படத்தை பொறுத்தவரை ஹீரோவும் அவர்தான் வில்லனும் அவர்தான். அதாவது வில்லன்தான் ஹீரோ.

போஸ்ட்மார் டம் செய்யாமல் பாக்யராஜ் மகளை ஒப்படைக்க வேண்டும் என்று டாக்டர் தானியாவிடம் டேனியல் பாலாஜி போனில் மிரட்டுவதும் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் தானியா போஸ்ட்மார்டம் செய்வதும் காட்சியில் டென்ஷனை அதிகரிக்கிறது.
டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த  டேனியல் பாலாஜியை போலீஸ் கமிஷனர் தமிழ், தனது அலுவலகத்துக்கு அழைத்து எச்சரிக்கை விடுவதும் ஆனால் அதற்கும் பயப்படாமல் நெஞ்சை நிமித்திக்கொண்டு அமர்ந்திருக்கும் டேனியல் பாலாஜி நிஜவில்லனாகவே மாறிவிடுகிறார். தன்னை மிரட்டிய போலீஸ் கமிஷனரை கடற்கரைக்கு வவரவழைத்து  கடலுக்குள் பேக்கப் செய்வது எதிர்பாராத ஷாக்.

டாக்டராக வரும் தான்யா முறைப்புடன் நடித்து கதாபாத்திரத்தை நிலை நிறுத்துகிறார்.
பாக்யராஜ் ஒரு பெண்ணுக்கு தந்தையாக வந்து இதுவரை இல்லாத அளவிற்கு கதறி அழுது நடித்திருப்பது அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் மாறுபட்ட நடிப்பு.

சாட்பார் அருண் எம் போஸமியா, ராஜேஷ் தாகூர், பரேஷ் ஜகடா, ஹீரேண் பட்டேல் படத்தை தயாரித்திருக்கின்றனர்

ஜிப்ரான் இசை காதை கிழிக்கிறது, காட்சிகளை துரத்திக் கொண்டு செல்கிறது. அதேபோல் ராமலிங்கம் கேமராவும் மின்னல் வேகத்தில் பறந்து இருக்கிறது.

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஜெ பி . மாறுபட்ட கதை களத்தை வித்தியாசமாக கையாண்டு மிரள விட்டிருக்கிறார்.

B P 180 – தொடக்கம் முதல் இறுதி வரை வேகம் – பரபரப்பு.

Review By

K Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

Sridhar ARS Dance Academy presents ‘Dance Don 2′

Jai Chandran

Koozhangal Selected for Screening in Molodist Festivel

Jai Chandran

Lyrical video of Kazhumaram from Tomorrow 5 PM

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend