புவனேஸ்வரி சங்கரின் ‘வெங்கடபதி பிலிம்ஸ்’ வழங்கும் புவனேஸ்வரி சங்கrin வேங்கடபதி பிலிம்ஸ் பெருமையுடன் தனது முதல் திரைப்படத்தை மக்களுக்கு வழங்கவுள்ளது. புதுமுக இயக்குநர் குருவேல் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு “கட்டம் தன் கடமையை செய்யும்” என்ற புதுவித தலைப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“நாடக காதலுக்கு சட்டம் தான் வேலை செய்யும்”, உண்மை காதலுக்கு கட்டம் தான் வேலை செய்யும் என்பதே இந்த படம் சொல்ல வரும் கருத்து. ஏற்கனவே ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரிஜன் சுரேஷ் இந்த படத்தின் நாயகனாக களமிறங்க கதாநாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடிக்கின்றனர். படக்குழு மற்றும் பிற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.