Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காந்தாரா சேப்டர் 1 (பட விமர்சனம்)

படம்: காந்தாரா சேப்டர் 1

நடிப்பு: ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா

தயாரிப்பு: ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர்

இசை: அஜ்னீஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்

இயக்கம்: ரிஷப் ஷெட்டி

பி ஆர் ஓ: யுவராஜ்

ஈசன் தவம் செய்ய பார்வதியால் படைக்கப்பட்ட இடம் காந்தாரா. ஈசனின் அருள் பெற்ற அந்த இடத்தில் காட்டுப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். பாங்காரா என்ற மற்றொரு பகுதியில் இளவரசன் குலசேகரன் ஆட்சி புரிகிறான். சிறுவயதில் இளவரசனின் தந்தை,  காந்தாரா பகுதிக்கு செல்ல வேண்டாம் அங்கு பிரம்ம ராட்சசன் இருக்கிறான் என்று  மகனுக்கு கூறுகிறார். ஆனால் வளர்ந்து பெரியவனான  குலசேகரன் காந்தாரா பகுதியில் அத்துமீறி நுழைகிறான். அவனை இறைவன் சக்தியும் காத்தாரா பகுதி மக்களும் விரட்டி அடிக்கின்றனர். பாங்காரா பகுதிக்கு  காந்தாரா பகுதியில் வாழும் அப்பகுதி காவலன் எனப்படும் பெர்மே (ரிஷப் ஷெட்டி) சக தோழர்களுடன் செல்கிறார். அவர்களை இளவரசன் சிறை பிடித்து கொடுமை படுத்துகிறான். ஆனால்  தந்தை அவர்களை விடுவிக்குமாறு கூறுகிறார். வேறு வழியின்றி விடுவிக்கும் இளவரசன் குலசேகரன் காந்தாரா மக்களை அழிக்க முடிவு செய்கிறான். காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வருகிறான் அதன் பிறகு ஒரு போர்க்ககளத்தில் என்ன நடக்கிறது, காந்தாராவின் சக்தி என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் கிளைமாக்ஸ்.

ஏற்கனவே காந்தாரா முதல் பாக  படத்தை  ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 திரைக்கு வந்திருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் ஆக்ரோஷமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
காந்தாரா காட்டுப் பகுதியில் நடக்கும் ஈசனின் மாய வித்தைகள் அச்சத்துடன் கலந்த ஒரு ஆச்சரியத்தை தருகிறது.
படத்தின் முதல் பாதி பாங்காரா இளவரசன் குலசேகரனுக்கும், காந்தார பகுதி பெர்மேக்கும் (ரிஷப் ஷெட்டி) இடையே நடக்கும் நேரடி மோதலாக அமைகிறது.
இடைவேளைக்கு பிறகு காந்தாரா காட்டுப்பகுதியில் ஈசனின் அருள் பெற்ற ரிஷப் ஷெட்டியின்   மீது ஆக்ரோஷமான காந்தாரா கடவுளின் உருவம் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது. இது பக்தியை வரவழைக்கிறதா, பயத்தை வரவழைக்கிறதா என்பதை கணிக்க முடியவில்லை. ஆனால் இந்த வேடத்திற்காக ரிஷப் ஷெட்டி ஆன்மாவை அர்ப்பணித்து நடித்திருக்கிறார். அவரது அந்த ஆவேச குரல் மனதில் பக்தி நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

குலசேகர மன்னனாக குல்ஷன் தேவய்யா நடித்திருக்கிறார். அவர் செய்யும் அட்டூழியங்கள் எந்த நேரத்திலும் இவருக்கு காந்தாரா பகுதியில் ஒரு ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மன்னராக ஜெயராம், இளவரசியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார்கள். இதற்கு மேல் இந்த படத்தை விமர்சிப்பது கடினம் ஏனென்றால் காட்சிகள் ஒவ்வொன்றும் கிலோமீட்டர் நீளத்துக்கு நீள்கிறது. திரையில் பார்த்தாலே புரிந்து கொள்வது கடினம். மேலோட்டமாக புரிந்து கொண்டு பார்ப்பதே ஒரு புதிய அனுபவத்தை தரும்.

ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர் இப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

அஜ்னீஸ் லோக்நாத் இசைதான் படத்தையும், அரங்கையும் ஆட்டிப்படைக்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் ஒரு பெரும் டீமுடன் இந்த படத்திற்கு கேமரா பணிகளை கவனத்திருப்பது வெட்ட வெளிச்சம்.

இப்படி ஒரு ஆன்மீக விபரீத விளையாட்டை  மேற்கொண்டு ரிஷப் ஷெட்டி படத்தை இயக்கியதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.. ஆனால் படப்பிடிப்பின்போது இழப்புகளை சந்தித்தாலும் லட்சியத்தை அடையும் விதமாக படத்தை எவ்வளவு வேகத்துடன் பரபரப்புடன் தர முடியுமோ அப்படி தந்திருக்கிறார்.

காந்தாரா சேப்ட்டர் 1 – காந்தாரா ஈசனின் நிஜ ருத்ரதாண்டவம்…

Review By k.Jayachandhiran trendingcinemasnow.com

 

Related posts

மேலும் 14 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு..

Jai Chandran

யாஷின் ‘டாக்ஸிக் தமிழ்நாடு வர்த்தகம் சாதனை..

Jai Chandran

பிரபாஸ்- பூஜா ஹெக்டே காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend