Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மரியா (பட விமர்சனம்)

படம்: மரியா
நடிப்பு: சாய் ஸ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா

தயாரிப்பு: ஹரி கே
ஹரசுதன்

இசை: அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன்

ஒளிப்பதிவு: மணிசங்கர் ஜி

இயக்கம்: ஹரி கே சுதன்

பிஆர்ஓ: சதீஷ் (AIM)

இளம் வயதில் கன்னியாஸ்திரி ஆன மரியா ( சாய் ஸ்ரீ) தனது தோழியை தேடி அவரது இருப்பிடத்திற்கு வருகிறார். நீண்ட நாள் கழித்து மரியாவை சந்திக்கும் தோழி தான் தங்கி இருக்கும் வீட்டிலேயே ஒரு அறையில் தங்க வைக்கிறார். அங்கு ஆண் நண்பருடன் இருக்கும் தோழி சல்லாபத்தில் ஈடுபட அதையறிந்து மரியா விரக தாபம் கொள்கிறார். அவளும் ஆண் நண்பருடன் பழகி சல்லாபம் செய்ய எண்ணுகிறாள். இதற்காக தான் கன்னியாஸ்திரி என்ற எல்லையில் இருந்து வெளிவந்து சராசரி பெண்ணாக வாழ முடிவு செய்கிறாள். அதற்காக கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான ஒரு கூட்டத்துடன் இணைகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது மரியா படத்தின் கதை.

மரியாவாக நடித்திருக்கும் சாய் ஸ்ரீ கன்னியாஸ்திரி  வேடத்திற்கு பொருத்தமாக அமைதியான முகம், பக்குவமான பேச்சு என்று தனது முதிர்ச்சியை காட்டுகிறார். ஆனால் போகப் போக உடல் சுகத்துக்கு ஏங்கி அவர் விரகதாபத்தில் துடிப்பது, ஆண் துணை தேடி சல்லாபத்துக்கு பச்சைக்கொடி காட்டுவது என்று தனது கன்னியாஸ்திரி வேடத்திற்கு களங்கமாக மாறிவிடுகிறார்.
மரியா என்ற புனித பெயர் கிறிஸ்தவர்களால் போற்றப்படும் ஒன்று,  அந்த பெயரையே  களங்கப்படுத்தும் விதமாக கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தை சுய இன்பம் கொள்ளுதல், ஆண் நண்பருக்கு அலைவது என்று காட்டி ஆபாச சித்தரிப்புகள் செய்திருப்பது இயக்குனர் சாய் கே சுதர்சன் என்ன நியாயம் கற்பித்தாலும் அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதை உணர முடிகிறது..

படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

பாவல் நவகீதன் கிறித்தவ மதத்திற்கு எதிரான பிரச்சாரத்தையும் கடவுள் மறுப்பாளராக வந்து எதிர்மறையான வசனங்கள் பேசி தன்னை கிறிஸ்துவர்களுக்கு எதிராக காட்டிக் கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது எப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஹரி கே
ஹரசுதன் படத்தை தயாரிக்க அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்திருக்கிறார்கள்.

மணிசங்கர் ஜி ஒளிப்பதிவு வண்ணப் படத்தை பெரும்பாலும் பிளாக் அண்ட் ஒயிட்டிலேயே பதிவு செய்திருக்கிறது.

இயக்குனர் ஹரி கே சுதன் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான ஒரு படமாகவே  இயக்கி இருக்கிறார். இது யார் மனதையும் புண்படுத்தாது என்று அவர் கூறினாலும் படத்தில் இடம்பெறும் காட்சிகள் கிறிஸ்தவ மதத்தினை சார்ந்தவர்களை புண்பட செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

கன்னியாஸ்திரி ஆக இளம்பெண்கள் செல்வது கட்டாயத்தின் பெயரிலா அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரிலா என்ற சந்தேகத்திற்கு படத்தில் விடையில்லை, அதேபோல்  கன்னியாஸ்திரி ஆக மாறியவர் மீண்டும் சராசரி வாழ்க்கைக்கு திரும்ப முடியாதா என்ற கேள்விக்கும் படத்தில் பதில் இல்லை

மரியா – வில்லங்கம்..

Review By

K Jayachaghiran

trendingcinemasnow com

 

Related posts

Umapathy Ramaiah’s movie  shooting starts with pooja

Jai Chandran

Samavarthi – Title & First Look Unveiled..

Jai Chandran

Red Giant Movies to present Prabhas starring Pan-India film ‘Radhe Shyam’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend