‘நான்’ படத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சலீம், இந்தியா பாகிஸ்தான் , அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த ’பிச்சைக் காரன்’. சூப்பர் ஹிட் படமாக அமைந்தது வெற்றி பெற்றது. சசி இயக்கி இருந்தார். பிச்சைக்காரன் படம் 2ம் பாகம் உருவாக விருப்பதாக கூறப்பட்டு வந்தது. விஜய் ஆண்டனியும் அதனை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
விஜய் ஆண்டனிக்கு இன்று பிறந்தநாள் இதையொட்டி பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற பாரம் படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.
விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங் களில் நடித்து வருகிறார்.