கமல், ரஹ்மான் கூட்டணியில் ’தலைவன் இருக்கிறான்
சிவாஜி, கமல்ஹாசன். நாசர் நடித்த ’தேவர் மகன்’ படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது ’தலைவன் இருக்கிறான்’.
இப்படத்தின் மூலம் 19 வருடத்துக்கு பிறகு கமல்ஹாசன் ஏ ஆர் ரஹ்மான் இணைகின்றனர்.
ஏற்கனவே இருவரும் ’இந்தியன்’ படத்தில் இணைந்தனர்.கமல். ரஹ்மான் இருவரும் இன்ஸ்டாகி ராமில் சந்தித்து பேசினர்.
அப்போது கமல் கூறியது: இளையராஜா இசையி 90 களில் நான் ஈடுபாடுடன் இருந்தேன். ரஹ்மானை தாமதமாக அடையாளம் கண்டேன். புதிய பாடல் ஒன்றுக்காக இருவரும் ஒரு வருடத்துக்கு இணைந்து பணியாற்றினோம். பிரமாதமான பாடலாக வந்திருக்கிறது. வேறு எந்த ஹீரோ வுக்காவது இந்த பாடல் கஅமைந்திருந்தால் திருந்தால் நான் பொறாமை அடைந்திருப்பேன்.
இருவரும் ஒரு வார்த்தையில் அதிக ஆர்வம் காட்டினோம். அதை வைத்து பாடல் எழுதும்படி ரஹ்மான் கூறினார். இரவு முழுவதும் அமர்ந்து காலை 8.30 மணிக்கெல்லாம் பாடல் எழுதி முடித்து மாலையே பாடலை முடித்துவிட்டோம்.
அந்த பாடல் உங்களுக்கு விரைவில் வெளியிட ஆர்வமாக இருக்கிறேன்.
இவ்வாறு கமல் கூறினார்.