முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து சினிமாவில் முன்னணி ஹீரோன்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருந்தவர் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு குழந் தையும் பிறந்தது. காஜல் அகர் வாலை திருமணம் செய்து கொள்ள குடும்பத் தினர் வற்புறுத்தி வந்தனர்.
கொரோனா ஊரடங்கில் கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்த நிலையில் அவரிடம் குடும்பத்தினர் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்ற னர்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு வுடன் திருமணம் பேசி முடிக் கப்பட்டதுடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. இதுபற்றிய தகவல் பரவியபோது மவுனம் சாதித்த காஜல் பின்னர் அவரே திருமணம் பற்றி அறிவித் தார். ’நான் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொள்கிறேன் என்பதைப் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அக்டோபர் 30, 2020 மும்பை யில், எங்கள் நெருங்கிய குடும்ப உறவினர்கள் சூழ ஒரு சிறிய, விழாவில் திருமணம் நடக்கிறது. இந்த கொரோனா தொற்றுநோய் காலம் இந்த மகிழ்ச்சியான தருணத்தை தந்திருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம், நீங்கள் அனை வரும் எங்களை உற்சாகப்படுத்துவீர்கள் என்பது எனக்கு தெரியும் “என்று தெரிவித்தார்
காஜல் திருமணம் மும்பையில் உள்ள பங்களாவில் இன்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள். முன்னிலையில் திரும ணம் நடந்தது. காஜல் கழுத்தில் கவுதம் கிட்ச்லு தாலி அணிவித்தார். முன்னதாக் நேற்று மெஹந்தி விழா நடந்தது.
காஜல் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.