Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பத்துதல (பட விமர்சனம்)

படம்: பத்துதல

நடிப்பு: சிம்பு,
கவுதம்மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி, ரெடின்கிங்ஸ்லி, சவுந்தர ராஜன், சந்தோஷ் பிரதாப், அனுசித்தாரா

தயாரிப்பு: கே. ஈ.ஞான வேல்ராஜா, ஜெயந்திலால் காடா

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: பரூக் ஜெ பாஷா

இயக்கம்: கிருஷ்ணா

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா (D one)

கன்னியாகுமரியில் மணல் அள்ளும் ஏ ஜிஆர்(சிம்பு) அரசாங்கத் தையே நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறார். திடீரென்று முதல்வர் கடத்தப்படுகிறார். அவரை தேட சி பி ஐ அதிகாரிகள் படை விரைகிறது. உளவு பார்க்கும் அதிகாரி சக்தி வேல் ( கவுதம் கார்த்திக்) ஒரு அடியாள்போல் சிம்புவிடம் சேர்கிறார். இதற்கிடையில் துணை முதல்வராக இருக்கும் நாஞ்சிலார் குணசேகரன் (கவுதம் மேனன்) ஏ ஜி ஆர் சாம்ராஜ்யத்தை வீழ்த்த திட்டமிட்டு காய் நகர்த்து கிறார். அதிலிருந்து ஏ ஜி ஆர் தப்ப முடிகிறதா என்பதை அதிரடியாக கிளைமாக்ஸ் சொல்கிறது.

ஏ ஜி ஆர் என்ற மணல் கடத்தும் மாபியா தலைவ னாக நடித்திருக்கிறார் சிம்பு. இது முழுக்க ரசிகர் களை கட்டி இழுக்கும் காந்த சக்தி கதாபாத்திர மாக உருவெடுத்திருக் கிறது.

“நான் நன்றி எதிர்பார்க் கிறதில்ல, நன்றி மறந்த வன விட்டுவைக்கறது மில்ல” என்று தொடக் கத்தில் பஞ்ச் வசனத்தை சிம்புவின் குரலில் கேட்கும் போதே ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந் தாலும் அவரது நேரடி என்ட்ரி இடை வேளைக்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் வருகிறது. அதுவரை அவர் முகத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களின் ஆரவாரம் அவர் திரையில் தோன்றியதும் அரங்கை அதிர விடுகிறது.

நம்பிக்கை துரோகம் செய்யும் நபர்களை நேரடி யாக வெட்டி சாய்ப்பது, குண்டு வைத்து சிதற விடுவது என அதிரவைக் கிறார் சிம்பு.

தங்கை அனுசித்தாரா தன்னிடம் பேசாமல் இருப்பதால் சோகமாக இருக்கும் சிம்பு ஒரு கட்டத்தில் அவர் தன்னிடம் ஹாப்பி பர்த்டே சொல்ல அதைக்கேட்டு முகம்மலர சந்தோஷத்தில் ஆழ்வதும், அதே வேகத்தில் “அக்கரையில நிக்கறவன எட்டுது நம்ம சத்தம் ” பாடலுக்கு போடும் ஆட்டமும் கலக்கல்.

எவ்வளவு பெரிய மாபியா தலைவனாக இருந்தாலும் பேச்சிலும் நடிப்பிலும் நிதானம் காட்டினாலும் ஆழமும் அதிர்வும் காட்டுகிறார்.
ஒரு சில இடங்களில் நடையில் வேகம் காட்டியி ருந்தால் திரைகூட கிழிந்தி ருக்கும்.

சிம்புவை உளவு பார்த்து சி பி ஐயில் சிக்க வைக்கும் அதிகாரியாக கவுதம் கார்த்திக் நடித்திருந் தாலும் சிம்புவின் நடிப்பு ஆரவாரத்தக்கு முன்பு தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

பிரியா பவானி உள்ளிட்ட மற்ற எல்லா பாத்திரங் களும் எல்லைக் கோட் டோடு நின்று விடுகிறது.

சிம்புவின் பாடிகாட் போல் சிங்கா என்ற பாத்திரத்தில் கன்னட நடிகர் மதுகுரு சாமி நடித்திருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி சமயம் கிடைக்கும்போது சிரிக்க வைக்க முயல்கிறார்.

கே.ஈ. ஞானவேல்ராஜா, ஜெயந்தி லால் காடா அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கின்றனர்.

படத்தின் மற்றொரு பலம் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் ஹாலிவுட் தர இசை.
” அக்கரையில நிக்கறவன எட்டுது நம்ம சத்தம்” பாட்டு ஆட்டம்போட வைக் கிறது. மெலடிக்கும் குறைவைக்க வில்லை. படத்தின் பின்னணி இசை பிரமாண்டத்தை அதிகரிக் கிறது.

பருக் ஜே பாஷா ஒளிப் பதிவு பான் இந்தியா தரத்துக்கு சுழன்றிருக் கிறது.
ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க விட்டிருக் கிறார் சக்தி சரவணன்.

பத்துதல – சிம்புக்கு ஒரு பாட்ஷா.

Related posts

நடிகை கீர்த்தி சுரேஷ்  தொடங்கிய புதிய நிறுவனம்  “பூமித்ரா” 

Jai Chandran

விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் ஹாட்ரிக் போட்டோ ஷூட்

Jai Chandran

டாக்டர் வே.சரவணன் வழங்கும் படம் ‘செவிலியர் கடவுள்’.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend