சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் கே ஈ
ஞானவேல் ராஜா படத்தை அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளார்.
இப்படம் வெளியான தினத்தில் இருந்து சமூக வலைதளங்களில் பாசிட்டிவாகவும், அதிக அளவில் நெகடிவ் ஆகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனாலும் படம் ரசிகர்கள் தங்களை படம் கவர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பலர் கங்குவா படத்தை கடுமையாக விமர்சித்து தாக்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகை விமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவா படம் பற்றி தனது கருத்தை விமர்சன பாணியல் பகிர்ந்து இருப்பதுடன் கங்கா படத்தை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி தந்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடகை ஜோதிகா கூறியிருப்பதாவது:
கங்குவா படம் குறித்து சூர்யாவின் மனைவி யாக அல்லாமல் சினிமாவை நேசிப்பவராக நான் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேந். முதலில் சூர்யாவை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் உங்கள் கனவை நனவாக்கியுள்ளீர்கள்.
கண்டிப்பாக கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் சப்தம்
(sound) பிரச்சினையாகவே இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
மொத்தம் 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வெளியான கங்குவா படத்தில் அரை மணி நேரம்தான் அப்படியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் இது போல் கேமரா பயன்பாடுகளை பார்த்ததே இல்லை. பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் நன்றாகவே இல்லாத படங்களுக்குகூட இத்தகைய விமர்சனங்கள் வந்ததில்லை.
ஆனால் ஊடகங்களில் இருந்து கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். பெண்களை இழிவாக சித்தரித்து இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்கு கூட இப்படி விமர்சனங்கள் வந்ததில்லை. படம் வெளியான முதல் நாளே இது போன்று அவதூறுகள் பரப்பப்பட்டன.

கங்குவா படத்தில் இருந்த நல்ல விஷயங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களுக்கு ஸ்கோப் இருக்கிறது. சிறுவனின் அன்பு, கங்குவாவின் பழிக்கு பழி போன்றவை எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை. ஒரு படத்தை விமர்சனம் செய்யும் போது நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிடுகிறீர்கள்.
படம் வெளியான முதல் நாளே கங்குவா குறித்து நெகட்டிவ் கமெண்ட்டுகள் வெளியானது வருத்தமளிக்கிறது. 3 டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கங்குவா படக்குழு எடுத்த முயற்சிகளுக்கும் படத்தின் கான்செப்ட்டுக்கும் பாராட்டுகளை தெரிவிக்காமல் எதிர்மறை விமர்சனம் ஏன், குறைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது. அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் குறைக் கூற கூடாது.
கங்குவா படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் புறந்தள்ள வேண்டும்.
இவ்வாறு ஜோதிகா அறிக்கையில் கூறியுள்ளார்.
