Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

15-வது ஆண்டில் ஜே எஸ் கே தரும் புது இயக்குனர்களுக்கு அரிய வாய்ப்பு!

பல தேசிய விருதுகள் வென்ற படங்களை தயாரித்த ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் 15வது ஆண்டு கொண்டாடுகிறது. இந்நிலையில் புது இயக்குனர்களுக்கு பட வாய்ப்பு பற்றி அறிவித்துள்ளது. இது குறித்து ஜே எஸ் கே சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

JSK FILM CORPORATION நிறுவனம் இன்று 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய சிந்தனை, புதிய கோணம், புதிய பாதை என்று தனித்தன்மையுடன் செயல்பட்டு வித்தியாசமான கதைகளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் – வெளியிட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்து 2 முறை பெருமைக்குரிய தேசிய விருதுகளையும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பெற்று மக்களின் நல் ஆதரவோடு இந்நிறுவனம் 15-வது வருடத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட புதிய இயக்குனர்களையும் 6-க்கும் மேற்பட்ட புதிய இசையமைப்பாளர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு.
அதுமட்டுமில்லாமல் எங்கள் நிறுவனம் சொந்தமாக நடத்திவரும் Youtube சேனலில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் subscriber-களாக இணைந்துள்ளனர். JSK AUDIO என்ற ஆடியோ நிறுவனமும் சொந்தமாக தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இத்தருணத்தில் நீண்ட நாட்களாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படமும், அருண்விஜய் நடப்பில் ‘வா டீல்’ திரைப்படமும் வெகு விரைவில் வெளியாகும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இந்த ஆண்டு மேலும் இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்காக புதிய இயக்குனர்களிடம் கதைகளை கேட்பதற்கு தயாராக உள்ளோம். புதிய இயக்குனர்கள் புதிய சிந்தனையுடன் வித்தியாசமான கதையம்சத்துடன் 9884318883 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், jskfilmcorp@yahoo.com என்ற இமெயில் ஐடி-யிலும் தொடர்பு கொள்ளலாம்.
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறையினருக்கும், திரைப்படத்துறையினருக்கும் ரசிக பெருமக்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு ஜே எஸ் கே சதீஷ்குமார் கூறி உள்ளார்.

Related posts

Prabhas to star as ‘Bhairava’ ‘Kalki 2898 AD’

Jai Chandran

சூரி படத்தை இயக்கும் பிரசாந்த் பாண்டியராஜன்

Jai Chandran

தமன்னாவின் ஒரு தலை காதலும் ஒரு வித சுகம் தான்! ❤️‍🩹

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend