Trending Cinemas Now
விமர்சனம்

பாப்பிலோன் (பட விமர்சனம்)

படம்: பாப்பிலோன்
நடிப்பு: ஆறு ராஜா, சுவேதா ஜோயல், காதம்பரி (சவுமியா), ரேகா, சுரேஷ், பூ ராம், கல்லூரி வினோத்,
தயாரிப்பு: பளூமிங் ஆர்ட்ஸ்
இசை: ஷியாம் மோகன்
ஒளிப்பதிவு:
சி.டிஅருள்செல்வன்
இயக்கம்: ஆறு ராஜா
பி ஆர் ஓ:  ஏ.ஜான்
கொடைக்கானலில் பூ செடிகள் விற்கும் நர்ஸரி நடத்தி வரும் ஹீரோ வீரா தனது தாய், தங்கையுடன் வசிக்கிறார். ஆறு ராஜா மீது இளம்பெண் வைஷாலிக்கு காதல். தினமும் ரோஜா பூ கொடுத்து காதலை சொல்கி றாள். வீரா ஏற்கவில்லை. இந்நிலையில் வீராவின் தங்கை தனது செல்போனை ரிப்பேருக்கு கொடுத்து வாங்குகிறாள். அதில் வீராவின் தங்கையின் சில அந்தரங்க படங்களை செல்போன் ரிப்பேர் செய்பவர் திருட்டுத் தனமான பிரதி எடுத்து அதை ஒரு கும்பலுக்கு விற்கிறார். அந்த கும்பல் தங்கையை மிரட்டுகிறது. தன்னிடம் உல்லாசமாக இருக்க வேண் டும் அல்லது 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டல் விடுக்க வீராவுக்கு தெரியா மல் பணத்தை அந்த கும்பலி டம் தரச் செல்கிறார் தங்கை. ஆனால் அவர்கள் தங்கையை கடத்துகிறார்கள். அவர்களிடம் போராடி காரிலிருந்து குதிக்க காயம் அடைகிறாள். ஆபத் தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கின்றனர். அப்போதுதான் வீராவுக்கு தன் தங்கையை மிரட்டிய கும்பல் பற்றி தெரிய வருகிறது. அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்க முடிவு செய்கிறான். இதன் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் சற்று வித்தியாசமாக பதில் சொல்கி றது.
ஹீரோ வீராவாக ஆறு ராஜா நடித்திருப்பதுடன் படத்தை இயக்கும் பொறுப்பையும் அவரே ஏற்றிருக்கிறார். பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியிடம் உதவி ஆர்ட் டைரக்டராக பணியாறி தற்போது ஹீரோ, இயக்கம் என களம் கண்டிருக்கிறார் ஆறு ராஜா.
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்தி இருப்ப துடன் சட்டத்தின் முன் தப்பிக்கும் இதுபோன்ற குற்ற வாளிகளை பாதிக்கப்பட்ட வர்கள் எப்படி பழிவாங்க எண்ணுவார்கள் என்பதையும் ஆக்‌ஷடன் படமாக்கி இருக் கிறார் ஆறுராஜா.
தன்னிடம் சுவேதா காதலை சொல்ல அதை ஏற்காமல் நிராகரிக்கும் ராஜா, அடிக்கடி அவரை நய்யாண்டி செய்து வம்பிழுத்து காட்சியை கலகலப்பாக்குகிறார் ஆறு ராஜா.


காதலையே இழுத்துபிடித்துக் கொண்டிருக்காமல் திடீரென்று அதில் கிரைம் காட்சிகளை புகுத்தி வேறு திசைக்கு விறுவிறுப்பாக பயணிக்கிறது கதை. ஹீரோ வின் தங்கையாக வரும் காதம்பரி சகலகலப்புடன் பேசி சுட்டித்தனமாக உலா வருவதும் பின்னர் தனது அந்தரங்க வீடியோவை வைத்திருக்கும் கும்பல் மிரட்டத்தொடங்கியதும் பயத்தில் அலறி நடுங்கும் போது சக பெண்களின் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தங்கையை மிரட்டி அவரை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்ற கும்பலை பழிவாங்க ஹீரோ ஆறு ராஜா ஆவேசமாக களம் இறங்கி யதும் எந்த நேரத்திலும் அதிரடி ஆக்‌ஷன் தொடங்கும் என்ற படபடப்பு அரங்கை ஆக்ரமிக்கிறது.
ஹீரோ கோபத்தில் இருப்பதை உணர்த்த கண்களை பெரி தாக்கி ஆக்ரோஷமாக காட்டு வது கொஞ்சம் ஓவர். கிளை மாக்ஸ் காட்சியை முடித்தி ருக்கும் விதம் சரியான தீரவா என்று விவாதங்கள் எழுந்தா லும் இந்த தண்டனையைத் தான் மிரட்டல் பேர் விழி களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தர விரும்புகிறார்கள் என்பது உண்மை.
பண்ணையாராக வரும் பூ ராம், அவரது மகளாக நடித்திருப் பவரும் சஸ்பென்ஸ் பாத்திர மாக பயன்பட்டிருக்கிறார்கள். அவரை ரவுடிகள் தாக்க வரும்போது ஹீரோ ஆறு ராஜா என்ட்ரி கொடுத்து ரவுடிகளை அடித்து துவம்சம் செய்வது பரபரப்பு.
ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பலுக்கு பயந்து வீட்டில் தற்கொலை செய்துகொள் வதைவிட அதை வீட்டில் சொல்லி துணிச்சலாக தட்டி கேட்க வேண்டும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆறு ராஜா இயக்குனராக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கொடைக்கானலை குளிர்ச்சி மாறாமல் படமாக்கி இருக்கி றார் ஒளிப்பதிவாளர் சி.டி அருள்செல்வன்.
ஷியாம் மோகன் இசையில் பாடல்கள் கேட்கலாம். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே பாடலில் அர்த்தம் பொதிந் திருக்கிறது.
பாப்பிலோன் – பாலியல் வன்டுமைக்கு சரியான தண்டனை.

Related posts

யாரோ (பட விமர்சனம்)

Jai Chandran

ஜிகிரி தோஸ்த் (பட விமர்சனம்)

Jai Chandran

:களத்தில் சந்திப்போம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend