Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நகரை விட்டு ஒதுக்கப்படும் மக்கள் வாழ்க்கையை பேசும் ”ஜெயில்” – வசந்த பாலன்

அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது இயக்கி இருக்கும் புதிய படம் ஜெயில். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார், அபர்மதி ஹீரோயினாக நடிக்கிறார். இசை அமைப் பாளர் சிற்பி மகன் நந்தன்ராம் முக்கிய வேடத்தில் நடிக்கி றார். பசங்க பாண்டி, ரவிமரியா ஆகியோருடன் ராதிகா சரத்குமார் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கிரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாஸ் தயாரித்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் படத்தின் வெளியீடு மேற்கொள்கிறார். இம்மாதம் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

ஜெயில் படக் குழு நேற்று பத்திரிகை, மீடியாக்காரர்கள் சந்திப்பு நடத்தியது. அப்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் பேசியதாவது:

முதல்படம் என்பது எல்லோருக்கும் மிக முக்கிய மானது.என்னை வெயில் படத்தில் இசை அமைப்பாள ராக வசந்தபாலன்தான் அறிமுகப்படுத்தினார். ஈரானிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசந்த பாலன் படங்கள் இருக்கும். என்னை அவர் இசை அமைப் பாளராக அறிமுகப்படுத்திய போது எனக்கு 16 வயதுதான். பலர் என்னை இசை அமைப் பாளராக போடவேண்டாம் என்று வசந்தபாலனிடம் கூறினார்கள். ஆனால் விடாபிடியாக அவர் என்னை அந்த படத்தில் அறிமுகப்படுத் தினார்.
எப்போதுமே வசந்தபாலன் தனது படங்களில் ஒரு முக்கிய அரசியல் கருத்தை அல்லது வாழ்க்கை பற்றிய கருத்தை சொல்வார். ஜெயில் படத்தி லும் ஒரு முக்கிய அரசியல் மெசேஜை பதிவு செய்திருக்கி றார். ஜெய்பீம்போன்ற சில படங்கள் எப்படி கொண்டா டப்படுகிறதோ அதுபோல் ஒரு முக்கிய மெசேஜ் இதில் இருக்கும். இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் இதுவொரு பேசப்படும் மெசேஜாக இருக்கும். ஜெயில் படத்தை பார்த்துவிட்டதால் இதை சொல்கிறேன். இந்த படம் எடுக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களோடு நான் மட்டு மல்ல படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே வாழ்ந்தோம் என்று சொல்ல வேண்டும்.

 

இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது:
நான் கொரோனாவில் பாதிக் கப்பட்டு ஐசியுவில் இருந்த போதும் எழுதிக்கொண்டி ருந்தேன். என்னைப்போலவே பட தயாரிப்பாளரும் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இருவருமே மரணத்துக்கு அருகில் சென்றுவிட்டு வந்திருக்கிறோம்,
அங்காடித் தெரு முதல் காவியத்தலைவன் வரையிலான படங்கள் இப்போதும்பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது, நான தந்த எல்லா படங்களும் மக்களின் பாராட்டும், விருதுகளும் பெற்றிருக்கிறது. ஏதோவொரு படம் எடுத்தோம் என்றில்லா மல் ஒவ்வொரு படத்தில் மக்களின் வாழ்வையும் அதிலுள்ள போராட்டம், வலியையும் சொல்லும் படமாக தரவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்காக 7 வருடம் கூட காத்திருப்பேன். ஜெயில் படம் ஒரு முக்கிய அரசியலை பேசுகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள அரசியல். அடுக்கு மாடிகள் கட்டும் தொழிலாளர்கள், அதில் பணிபுரிபவர்கள் எங்கோ ஒரு கூவம் கரையோ ரத்திலோ அல்லது நகரத்திலி ருந்து அப்புறப்படுத்தப்பட் டோ தான் வாழ்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கிறது. ஆனால் ஏன் நடக்கிறது? இதுபற்றி வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒரு ஆராய்ச்சி புத்தகமே எழுதி இருக்கிறார். அதில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. இதில் நடக்கும் அரசியல் என்ன என்பதை ஜெயில் படம் பேசும்.
ஜெயில் என்று படத்துக்கு டைட்டில் வைத்தவுடன் ஜெயில் பற்றிய கதையை எடுக்க உள்ளதாக பலர் நினைத்தார்கள். ஆனால் ஜெயில் என்பது ஒரு கட்டிடம் அல்ல அது சமுதாய வெளி யிலும் இருக்கிறது. அதை அடிப்படையாக கொண்டு தான் இப்பட உருவாக்கப் பட்டிருக்கிறது.
வெயில் படத்தில் ஜிவி பிரகாஷை இசை அமைப்பா ளராக நான் அறிமுகப் படுத்தேன். ஆனால் அவரது இப்போதைய வளர்ச்சி மிகப் பெரியது. இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரமும் அதற்காக அவர் தந்த உழைப் பும் மிகக் கடுமையானது. ஒரு பார்வையாளனாக இருந்து தான் நான் இப்படத்தை படமாக்கினேன். இதுதான் காட்சி என்று சொல்லிவிட் டால் அதற்குண்டான நடிப்பை ஜி வி. பிரகாஷ்தான் செய்துமுடிப்பார். அந்தள வுக்கு இந்த கதாபாத்திரத்தில் அவர் ஈடுபாடு கொண்டிருந் தார். ஜெயில் படம் வரும், வரும் என்று காத்திருந்து நான் சோர்ந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் இதுவராது என்று மேலை கையை தூக்கிவிட் டேன் ஆனால் அதை வெளிக் கொண்டுவருவதில் ஜி.வி.பிரகாஷ் காட்டிய ஆர்வம் மிகப்பெரியது, அதேபோல் பி டி.செல்வ குமாரும் இப்பட வெளியீட் டுக்கு துணை நின்றார்.

”புலி” பட தயாரிப்பாளர் பி டி.செல்வகுமார் பேசியதாவது:
ஜெயில் படம் மிக முக்கிய விஷயத்தை பேசி இருக்கிறது. வசந்தபாலன் மிகச் சிறந்த படைப்பாளி. படைப்பாளிக்கான சுதந்திரம் தரப்பட வேண்டும் எந்தவொரு படத்தையும் தடுத்து நிறுத்த யாருக்கும் அதிகாரம் கிடை யாது. அப்படி எந்த படத்துக்காவது தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதை எதிர்த்து நான் நிற்பேன்.
ஜெயில் படம் அனைவரும் பேசும் படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இசை அமைப்பாளர் சிற்பி மகன் நந்தன்ராம் மிகமுக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின் அபர்மதியும் பேசப்படுவார்.

தயாரிப்பாளர் ஸ்ரீதரன் மரியதாஸ் கூறும்போது,’ஜெயில் பட கதை என்னிடம் இயக்குனர் வசந்தபாலன் சொன்னபோது அதை தயாரிக்க முடிவு செய்தேன். ஒரு கட்டத்தில் நான் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இப்படம் என்னவாகுமோ என்று எண்ணினார்கள். ஆனால் ஜெயில் படத்தை வெளியிட என்னை இறைவன் திருப்பி அனுப்பி இருக்கிறார்’ என்றார்.

Related posts

சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்.

Jai Chandran

நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

Jai Chandran

கமலின் மக்கள் நீதி மய்யம் கலெக்டரிடம் அளித்த மனு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend