Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘ மின்னும் ஓர் இரவு’ டிரைலர் வெளியீடு..

டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ டிரைலர் வெளியீடு*

*‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது*

*இனிகோ பிரபாகர் உடன் பணியாற்றிய இனிய அனுபவங்களை பகிரும் இயக்குநர் சிவபிரபு செல்வராஜ்*

Watch the trailer now: https://youtu.be/wL3v1rvh1z4

நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார்.

எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் பேனரில் குகன் சண்முகம் ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ள நிலையில், படத்தின் டிரைலர் சென்னையில் இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட்டது.

இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ படத்தில் அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதே கதை,” என்றார்.

நடிகர் இனிகோ பிரபாகர் உடன் பணியாற்றியது குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “படம் தொடங்கிய போது அந்நியர்களாக பழகத் தொடங்கிய நாங்கள் படம் முடியும் போது நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இனிகோ பிரபாகர்,  ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் உருவாக்கம் மற்றும் வெளியிட்டிலும் மிகவும் ஆதரவாக இருந்தார்,” என்று கூறினார்.

‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்திற்கு சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை எஸ்.என். பாசில் கையாண்டுள்ளார். ஸ்டண்ட்: மிரட்டல் சிவா, கலை இயக்கம்: தேவராஜ், ஒப்பனை: சி. முத்து சுடலை, உடைகள்: கார்த்திக் தமிழ்வாணன், ஸ்டில்ஸ்: பாவிஷி பாலன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

—.

Related posts

தரணிதரன் இயக்கத்தில் சிபி, ரம்யா நம்பீஸன் நடித்த ரேஞ்சர்

Jai Chandran

ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் ( பட விமர்சனம்)

Jai Chandran

எழில் இயக்கிய “யுத்த சத்தம்” எப்படி? நடிகர்கள் வியப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend