Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டைட்டானிக் (பட விமர்சனம் )

படம்: டைட்டானிக்

நடிப்பு: கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய், மமிதா, ஆனந்தி, ஆஷ்னா சவேரி, சேத்தன், தேவதர்ஷினி

தயாரிப்பு: திருக்குறள் என்டர்டெயின்மென்ட் சிவி குமார்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு : பல்லு

இயக்கம்: ஜானகிராமன்

பி ஆர் ஓ : நிகில் முருகன்

கதை : ரயில் பயணங்களில் சில நட்புகள் ஏற்படும் அந்த வகையில் ஒரே ரயிலில் பெங்களூர் பயணிக்கும் கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய் மூவரும் நண்பர்களாகி தங்கள் காதல் வாழ்க்கையை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த மூவரின் காதலுக்குள் நடக்கும் சம்பவங்களுக்கும், ராகவ் விஜய் திருமணத்திற்கும் என்ன தொடர்பு என்பதை சிறு அதிர்ச்சி சம்பவமாக விளக்குகிறது கிளைமாக்ஸ்

பள்ளி காதல், கல்லூரி காதல் அலுவலக காதல் என்ற மூன்று பருவ காதல் எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் தரம் பிரித்து, கரம் கோர்த்து தொடரும் காட்சிகளாக இணைத்திருப்பது சுவாரசியம்.

பல்வேறு படங்களில் ஹீரோயின்களுக்கு தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட் இந்த படத்தில் பள்ளி மாணவராக உருமாறி இருப்பது ஒரு அதிர்ச்சி,
22 வயதிலும் பள்ளிக்கூடத்தை தாண்டாத ஒரு மாணவர் என்பது கேட்பதற்கு பேரதிர்ச்சி இருந்தாலும் அதை இயக்குனர் காமெடியுடன் கலந்திருப்பது நமட்டு சிரிப்பை ஏற்படுத்துகிறது.

காளியின் காதலியாக நடித்திருப்பது யார் என்பதும், மனைவியாக வருவது யார் என்பதும் ஒரு சஸ்பென்ஸ்.

இவரது காதல் எபிசோட் முடிந்தவுடன் கல்லூரி காதலை கலையரசன் சொல்ல காட்சிகள் காதல், மோதல், பிரிதல் என வெவ்வேறு பாதையில் பயணிக்கிறது.

கல்யாணத்துக்கு தயாராகி செல்லும் புது மாப்பிள்ளைக்காக ராகவ் விஜய் வருகிறார். அவரது திருமணத்தில் தான் எல்லா பூகம்பமும் வெடிக்கிறது.

திருக்குறள் என்டர்டெயின்மென்ட் சிபி குமார் படத்தை தயாரித்திருக்கிறார்

நிவாஸ் கே பிரசன்னா இசையும், பல்லு ஒளிப்பதிவும் கை கொடுக்கிறது

த்ரீ இன் ஒன் பாணியில் காதலை மூன்று வடிவில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜானகிராமன்.

டைட்டானிக் – மூழ்கும் காதலா? மூழ்காத காதலா? என்று பட்டிமன்றம் பேசலாம்.

Review By
K. Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்

Jai Chandran

எட்டர்னல்ஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

நடிகர் கவின் டீச்சர் காதலியை மணக்கிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend