Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கோந்தல் ( படவிமர்சனம் )

படம்: கோந்தல்

நடிப்பு: கிஷோர் நிஷாத், லோகேஷ் சோஹோனி, இஷிதா தேஷ்முக் மற்றும் பலர்

தயாரிப்பு: சந்தோஷ் தாவகர், தீக்ஷா தாவகர்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு : அமலேந்து சவுத்ரி

இயக்கம்: சந்தோஷ் தாவகர்

பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா =D’ One), அப்துல் ஏ நாசர்

கதை: மராட்டிய கிராமப்புற இசை நாடகத்தை வைத்து இப்படம் உருவாகியிரு க்கிறது. திருமண விழாவன்று இரவில் தொடங்கி விடியும் வரை குலதெய்வ வழிபாடு நடக்கிறது அதில் திருமண வீட்டார் மற்றும் கிராம மக்கள் கலந்துக்கொள்கிறார்கள்.
இந்நிகழ்வின் போது சொல்லப்படும் வீரம் தழுவிய சம்பவங்களை இப்படத்தின் கதையாக உருவெடுத்திருக்கிறது.

கிராமத்து பின்னணி படம் என்றால் அதற்கு உயிர் நாடியான இசையை தர இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஒரு இசைக் கலைஞராக இருப்பவர் இசைஞானி இளையராஜா தான் அந்த உண்மை உலகம் முழுதும் தெரிந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் மராட்டிய கிராமப்புற இசை நாடக கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அவரை தேர்வு செய்து இசையமைக்க வைத்திருக்கிறார்கள்.

இளையராஜா இசை கதையின் உயிர் நாடி என்பதை சொல்லவும் வேண்டுமா?

மராட்டிய கிராம பகுதியில் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷுக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இஷிதாவுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது அன்று இரவுதான் குலதெய்வ வழிபாடு பூஜை தொடங்குகிறது. அந்த நேரத்தில் நடக்கும் கிராம பெரும்புள்ளி ஒருவனின் சூழ்ச்சியுடன் கூடிய சம்பவங்கள் காட்சிகளை கிளைமாக்ஸ் வரை நகர்த்திச் செல்கிறது.

படத்தின் முதல் 25 நிமிடம் ஒரே ஷாட்டாக படமாக்கப்பட்டிருப்பது ஹைலைட். அந்த 25 நிமிடத்தில் காட்டப்படும் மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரின் உணர்வுகள், மணமகள் நிச்சயதார்த்தம், ஆக்ரோஷம் எல்லாமே என இமைகளை இமைக்க மறக்கச் செய்கிறது. காட்சிகள் முடிந்த அடுத்த நொடி அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

மராத்திய மொழியில் கோந்தல் என்பதற்கு குழப்பம் என்று அர்த்தம். இந்த கதையில் ஏற்படும் குழப்பத்திற்கு முக்கிய காரணம் யார் என்பதுதான் இன்னொரு ஹைலைட்.
கதையை பொருத்தவரை 1970களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

மராத்திய மொழியிலிருந்து தமிழில் படம் டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. குழப்பமான கதை என்றாலும் தமிழில் பார்க்கும்போது  அந்த கதையின்போக்கு உணர்வுகளோடு கலந்து விடுகிறது.

கிராமப்புற திருவிழாவுக்கு சென்றால்  அங்கு இரவில் தொடங்கும் கூத்து விடிய விடிய நடக்கும். அதில் கேலி கிண்டல் ஆட்டம் பாட்டம் எல்லாமே இருக்கும். அந்த காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இப்படம்.

இப்படத்திற்கு இளையராஜா அமைத்திருக்கிறார் என்ற பெருமை மட்டுமல்லாமல் 2027 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஆஸ்கர் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்க தேர்வு செய்துள்ள படமாகவும் கோந்தல் இருக்கிறது என்பது மற்றொரு பெருமை.

கோந்தல் – இசை ஞானி இசையுடன்  கலந்த இயல் இசை நாடகம்..

Review By
K. Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

Here’s the Characters of Saaraiyan⚔

Jai Chandran

Kamal Haasan unveils the First Look of Karumegangal Kalaiginrana

Jai Chandran

ராமராஜன் பற்றி வதந்தி நம்பவேண்டாம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend