Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எழில் இயக்கிய “யுத்த சத்தம்” எப்படி? நடிகர்கள் வியப்பு

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரில்லர்  திரைப்படம் “யுத்த சத்தம் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் எஸ்.எழில்,  முதல் முறையாக தன் பணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார், கல்லல் குளோபல்  என்டர்டெயின்மென்ட் (Kallal Global Entertainment) சார்பாக  டி.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து “யுத்த சத்தம்” படத்தை தயாரித்துள்ளனர். திரை வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படத்தின் ரிலீஸுக்கு  முன்   படக்குழுவினர் கலந்துகொள்ள,  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் டி. இமான் பேசியதாவது:
எழில் சாருடன் தொடர்ந்து வேலை செய்வது இனிமையான விசயம், எந்த கவலையுமில்லாமல் நேரம் பற்றி இடையூரில்லாமல் வேலை செய்வோம். வேறொரு பாணியில் இப்படத்தை செய்திருக்கிறார். பின்னணி இசைக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. யுத்த சத்தம் சவுண்ட் மூலம் இயங்கும் ஒரு டிரக்கை அடிப்படையாக வைத்து தான்  இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது, அதைப்பற்றி இசையமைக்க மிக ஆவலாக இருந்தது. அதற்கென ஒரு தீமை உருவாக்கியுள்ளோம். பார்த்திபன் சார் திரையில் அற்புதமான நடிப்பை தந்துள்ளார், கௌதம் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள், படத்தில் பணிபுரிந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நாயகி சாய் பிரியா பேசியதாவது:
இது எனக்கு உணர்வுப்பூர்வமான தருணம், எழில் சார் முதல் முறையாக வித்தியாசமான பாணியில் படம் செய்துள்ளார், அதில் நானும் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி சார். பார்த்திபன் சாருடன் காட்சிகள் அதிகம் இல்லை, ஆனால் ஷீட்டில் இருக்கும்போது நிறைய அறிவுரை தந்தார். இமான் சாரின் மிகப்பெரிய ஃபேன் அவர் பாடலில் நடித்தது பெருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது:
தீபாவளி படத்தில் ஆரம்பித்தது, எழில் சாருடனான பயணம், இந்த போஸ்டரை பார்த்தால் தெரியும் இது அவர் படம் போலவே இல்லை, காமெடி படத்தில் கலக்குபவர், வேறொரு மாதிரி இப்படத்தை எடுத்துள்ளார், பார்த்திபன் சாருடன் நடித்தது மிக மிக சந்தோசம், சின்ன சின்ன அசைவுகளையும் படத்தில் சொல்லிக்கொடுத்தார், எல்லோரும் மிக கடின உழைப்பை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நந்தகுமார் பேசியதாவது:
பாடல்கள் எல்லாம் கேட்டேன் மிக மிக நன்றாக வந்துள்ளது, படம் அற்புதமாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

எடிட்டர் கோபிகிருஷ்ணா பேசியதாவது:
இந்தப்படத்தில் படம் முழுக்க ஒரு போதையை வைத்திருகிறார், நான் எடிட்டில் பார்த்தேன் திரையில் பார்க்கும் போது உங்களுக்கு இன்னும் பிடிக்கும், வழக்கமாக எழில் சார் படத்தில் எக்கச்சக்க கேரக்டர் இருக்கும்,  அவர்கள் பேசுவதில் எதை கட் செய்வது என்றே தெரியாது, ஆனால் இப்படத்தில் அப்படி எதுவும் இல்லை அதற்கெல்லாம் சேர்த்து பார்த்திபன் சார் பேசிவிட்டார் அவர் நடிப்பில் எதை எடிட் செய்வது என்பதே தெரியவில்லை. படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


நடிகர் இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது:
எழில் அவரோட எல்லாப்படத்திலேயும் எல்லா காட்சியிலும் காமெடி இருக்கனும்னு நினைக்கிறவர். நான் ராஜேஷ்குமாரின் மிக தீவிர ரசிகன் அவர் நாவலை வாங்கி ஒரு திரில்லர் படத்தை எடுத்திருக்கிறார். இமான் போதை தரும் இசையை தருபவர் இதில் போதயையே இசையாக தந்துள்ளார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் மிகப்பெரும் வெற்றி பெறும். நன்றி.

 

மாஸ்டர் கனல்கண்ணன் பேசியதாவது:
எழிலுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பணிபுரிகிறேன். இந்தப்படத்தில் நான் தான் வேணும் என்று தயாரிப்பாளரிடம்  கேட்டு  என்னை வைத்தார். எழில் படங்கள் எப்போதும் ஈஸியாக இருக்கும், இப்படம் முதல் முறையாக திரில்லர், கதையை பல முறை சொல்லி விளக்கி காட்சி அமைக்க சொன்னார்கள். அதை கேட்ட பிறகு கதை என்ன கேட்கிறது என தெளிவாக புரிந்தது. க்ளைமாக்ஸ் மட்டும் 7 நாட்கள் எடுத்தேன், இந்தப்படத்திற்கு அது அதிகம், மிக நீண்ட உழைப்பை இந்த படம் வாங்கியது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் எழில் பேசியதாவது:
நாம் எடுத்துகொண்டிருந்த படங்களில் இருந்து ரொம்ப தூரம் வந்துவிட்டோமே என யோசித்து, வேறு மாதிரி ஒரு படம் செய்யலாம் என முடிவு செய்தபோது, ராஜேஷ்குமாரின் நாவல் குறித்து தெரியவந்தது, நவீன் அந்த நாவலை மிக அழகான திரைக்கதையாக மாற்றினார்.  இந்தப்படம் எடுக்கலாம் என முடிவு செய்த போது,, இமான் தான் ஒரு ஹாலிவுட் படமான இர்ரிவர்ஸிபள் பட சவுண்ட் ஒன்றை காட்டினார் அது படத்திற்கு பொருத்தமாக இருந்தது. படத்தின் கடைசி 20 நிமிடத்தை எடுப்பது மிக சவாலாக இருந்தது. பார்த்திபன் சார் உடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர்க ளுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியை தரும், அவர்கள் இன்னும் நல்ல திரைப்படங்களை தருவார்கள். படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள் எல்லோருக்கும் நன்றி

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது:
தீபாவளி படத்திலிருந்து எடிட்டர் ரோபோ முதல் நான் வரை எல்லோரும் எழில் சாருடன் இருக்கிறோம். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் எல்லாவற்றையும் எப்படி சமாளிக்க வேண்டும், என்று கற்றுக்கொண்டது எழில் சாரிடம் தான். எந்த விசயத்தையும் கூலாக சமாளிப்பார். ஒருவரின் திறமையை மதிக்க தெரிந்தவர் எழில் சார், சூரி ரோபோ சங்கர் திறமையை கணித்ததால் தான் தீபாவளி படத்தில் நடிக்க வைத்தார். நான் பார்த்திபன் சாருடன் மாவீரன் கிட்டு படத்தில் வேலை பார்த்தேன். எழில் சாரும் பார்த்திபன் சாரும் வேறு மாதிரி வேலை பார்ப்பவர்கள் எப்படி ஒன்றாக படம் செய்யப்போகிறார்கள் என ஆர்வமாக இருந்தது. இந்தபடத்தில் கலக்கியுள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ரவி மரியா பேசியதாவது:
எனக்கு நன்றி சொல்ல வேண்டிய மேடை, கரடுமுரடான என்னை காமெடி பீஸ் என என்னை மாற்றி உலகம் முழுக்க ரசிக்க வைத்தவர் எழில் தான். இன்று என்னால் குணசித்திரமும் செய்ய முடியும் காமெடியும் செய்ய முடியும் என அனைவரும் எனக்கு வாய்ப்பு தருவதற்கு அவர் தான் காரணம், அவருக்கு வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மனதை கலக்கும் படங்கள் செய்தவர் மனம் கொத்தி பறவையில் காமெடியில் தன்னை நிரூபித்தார். அதே போல் இந்தப்படத்திலும் அவர் ஜெயிப்பார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது
எழில் யுத்த சத்தம் படம் செய்கிறார் என நான் கேள்விப்பட்ட போது நான் மிகவும்  ஆச்சர்யபட்டேன், பின் பார்த்திபன் நடிக்கிறார் என கேள்விபட்டபோது புரிந்தது. எப்போதும் புதுமையை நேசிப்பவரோடு பணிபாற்றும்போது, புதுமையாக தான் இருக்கும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:
இந்தப்படத்தில் எல்லாமே ஃபெர்பக்டாக இருக்கிறது. எழில் மிக டிசிப்ளினாக இருப்பவர். எந்த விசயத்திலும் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார். படத்தில் அனைவருக்கும் முழு சுதந்திரம் தந்ததாக சொன்னார்கள் ஆனால் அவர் எதாவது ஒரு விசயம் தவறினால் அதை சரி செய்து விடுவார். பார்த்திபன் ஒரு ஜீனியஸ். அவர் சொல்லும் ஒவ்வொரு சிறு வார்த்தையிலும் பெரிய அர்த்தம் இருக்கும். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இவ்வாறு பேசினார்கள்.

முன்னதாக.   பி ஆர்  ஒ  சுரேஷ் சந்திரா, ரேகா வரவேற்றனர்.

 

இயக்குநர் எழில் இயக்கிய யுத்த சத்தம்  திரைப்படத்தை ,  முன்னணி கிரைம்  நாவலாசிரி யர்களில் ஒருவரான ராஜேஷ் குமார் எழுதியுள்ளார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம்  கார்த்திக் ஆகியோர் முதன்மை வேடங் களில் நடிக்கின்றனர். மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல  முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.  டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர். Kallal Global Entertainment குளோபல்  என்டர்டெயின்மென்ட்  சார்பாக  டி விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து “யுத்த சத்தம்” படத்தை தயாரித்துள்ளனர்.

 

Related posts

Sekhar Kammula Directing Dhanush New Movie

Jai Chandran

Allu Arjun’s Pushpa2 Release Date Announced

Jai Chandran

லைகா புரோடக்சன்ஸ் சுபாஷ் கரன் பெப்ஸிக்கு ரூபாய் 1 கோடி உதவி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend