Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமலுடன் கூட்டணி: இந்திய ஜனநாயக கட்சி 20 தொகுதிகள் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் தலைவராக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இதையொட்டி கூட்டணி அமைக்கும் பணியில் கமல் ஈடுபட்டார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கு மக்களின் முதல் கூட்டணி என பெயரிடப் பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்கள், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 இடங்கள், மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன மக்கள் நிதி மய்ய ம் சார்பில் 110 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.  அடுத்த சரத்குமார் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். தற்போது இந்திய ஜனநயக கட்சி ( ஐ.ஜே.கே)  20 தொகுதிகளின் பட்டியல்; அறிவிக்கப்பட்டுள்லது. அதன் விவரம் வருமாறு:
சேப்பாக்கம்,
செங்கல்பட்டு,
காட்பாடி,
குடியாத்தம்,
அரூர்(தனி),
செங்கம்(தனி),
கலசப்பாக்கம்,
மயிலம்,
விக்கிரவாண்டி,
திருக்கோயிலூர்,
சங்கராபுரம்,
வீரபாண்டி,
குளித்தலை,
பெரம்பலூர்(தனி),
அரியலூர்,
விருத்தாச்சலம்,
புவனகிரி,
நன்னிலம்,
திருவையாறு,
பேராவூரணி ஆகிய 20 தொகுதிகளில் ஐ.ஜே.கே போட்டியிட உள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Related posts

வரும் 28ம் தேதி வெளியாகும் கபடதாரி: விஜய். சிம்புவுக்கு நன்றி சொன்ன சிபி..

Jai Chandran

திலீப்குமார் மறைவுக்கு வைஜயந்தி மாலா வீடியோவில் இரங்கல்

Jai Chandran

நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend