Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஒவ்வொருவருக்கும் சுகாதார அடையாள அட்டை. சுதந்திர தின விழாவில் மோடி உரை

.
..

புது டெல்லி ஆக 15

கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் இந்தி யாவில் எல்லோருக்கும் சுகாதார அட்டை வழங்கப் படும் என்றார் பிரதமர் மோடி.

இந்திய நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி
இன்று காலை 8 மணிக்கு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:
வித்தியாசமான சூழ்நிலை களை இந்தியா சந்தித்து வருகிறது. இங்கு குழந்தை களை காண முடியவில்லை. கொரோனா அவர்களை வரவிடாமல் தடுத்து விட்டது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு நமது மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணி யாளர்களை பாராட்டுகி றேன்.
இன்று சுதந்திரப் போராட்ட தியாகி களின் நினைவு போற்றும் நாள், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்.
130 கோடி இந்திய மக்களின் கனவான சுயச்சார்பு இந்தியா என்பது இப்போது உறுதிமொழியாக மாறி யுள்ளது. இது நிச்சயம் நிறைவேறும். நமது மக்களின் திறமை, உழைப் பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
சென்ற ஆண்டில் இந்தி யாவில் அன்னிய நேரடி முதலீடு 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்ற ஓராண்டில் காஷ்மீர் மாநிலத்தில் பெண்க ளுக்கும், தலித் மக்களுக்கும் உரிமைகள் நிலைநாட்டப்பட் டுள்ளது. பெண்களுக்கான குறைந்த பட்ச திருமண வயதை நிர்ணயிக்க கமிட்டி அமைத் துள்ளோம்.
கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அவை இப்போது வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன.
விஞ்ஞானிகளளின் உரிய அனுமதி கிடைத்ததும், அந்த மருந்துகள் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும்.
இந்தியாவில் 1300 தீவுகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆயிரம் நாட்களில், லட்சத்தீவு களுக்கு பைபர் தகவல் தொழில்நுட்ப இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தனித் தனியே சுகாதார அடையாள அடையாள அட்டை வழங்கப் படும். இந்த அடையாள அட்டையில் அந்த குறிப்பிட்ட நபர் உடல்நிலை தொடர் பான அனைத்து விவரங்களும் அடங்கியி ருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

,

Related posts

பவர் ஸ்டாரின் புதுவிதமான பவர் லட்டு

Jai Chandran

“Kanaa Kaanum Kaalangal” Web series Disney+ Hotstar

Jai Chandran

ChellammaVideoSong From DOCTOR will be Releasing Tomorrow

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend