ஜெயன் ரவி பேரண்மை, ஷாம், விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஷாம் குட்டி ராதிகா நடித்த இயற்கை போன்ற வெற்றி படங்களை இயக்கி அளித்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வந்தார். இதில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.
லாபம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் எஸ்.பி.ஜனநாதன் மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார்.
சமீபத்தில் காலமான ஜனநாதனின் தங்கையான லட்சுமி நேற்றிரவு காலமானார். ஜனநாதன் மறைவின் போது, அவரின் அருகில் அமர்ந்திருந்த லட்சுமி மயக்க நிலையை அடைந்திருந்த நிலையில் இந்த சோகம் நடந்துள்ளது. ஜனநாதன் மறைவு சோகம் முடியும்முன்பே மற்றொரு சோக நிகழ்வு அவரது குடும்பத்தை பாதித்துள்ளது பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது..