இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2000 நெருங்குகிறது..
புதுடெல்லி, ஏப்.
சென்ற ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபேய் மாவட்டம் வுகான் நகரத்தில் கொரோனா வைரஸ் லேசாக கண்டறியப்பட்டது. பிறகு உலக நாடுகளுக்கு பரவியது. 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கி றது. இதுவரை இக்கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க்கவில்லை.
உலகழுவதும் இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோ ருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 46 ஆயிரத்து 837 பல நாடுகளில் இறந்துள் ளனர். ஒன்பது லட்சம் பேருக்கு தொற்று பரவியி ருக்கிறது. மேலும் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்திருக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவது தெரிய வந்தவுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது வரை 1834 பேர் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது 1965 ஆக உயர்ந்திருக் கிறது. இது 2 ஆயிரத்தை எட்டாமல் இருப்பது மக்கள் கடைபிடிக்கும் கட்டுப் பாட்டை பொறுத்தே இருக்கிறது.
கொரோனா பாதித்து 50பேர் இறந்துள்ளனர். கொரோனா பாதிப் பிலிருந்து 151பேர் குணம் அடைந்துள் ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
#Corona Cases In India Reaches 1965