தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக உயர்வு..
சுகாதார துறை அறிவிப்பு..
சென்னை ஏப் : தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய இதுவரை 2726 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டது. அதில் 234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது தமிழகத்தில் 17 இடங்களில் பரிசோதனை ஆய்வு கூடங்கள் உள்ளன. 6 மையங்கள் தனியாரும், 11 மையங்கள் அரசுடைய தாகும்
கொரோனா பரவல் தடுப்பு வீட்டு கண்காணிப்பில் 77,330 பேரும், 81பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 4070 பேர் வீட்டு காவலில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலிருந்து வெளியில் வந்துள்ளனர்.
110 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக இருந்த நிலை யில், தற்போது 234 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1,103 பேர் தானாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர் . மற்றவர்களும் தமிழக அரசை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பீலா ராஜேஷ்
#TamilNadu Corona infected person increased from 124 To 234
#Beela Rajesh