நடிகர் ஆகிறார் பாக்ஸர் பட தயாரிப்பாளர் மதியழகன்
சிக்ஸ் பேக் உடற்கட்டு உள்ளிட்ட மூன்றுவித தோற்றங்களில் அருண் விஜய் நடிக்கும் படம் பாக்ஸர். ரித்விகா சிங் கதாநாயகி
இதில் வில்லன் வேடத்துக்கு நடிகரை தேடிய நிலையில் பட தயாரிப்பாளர் மதியழகனே பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் பட குழு கூறியது. முதலில் ஏற்க தயங்கிய தயாரிப் பாளர் டெஸ்ட் நடித்தார்.
இது குறித்த எக்ஸெட்ரா என்ட்டர் டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி.மதிய ழகன் கூறும்போது, ‘
பாக்ஸர் படத்தில் . எதிர் மறை வேடத்திற்கு சரியான நபரைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் மற்றும் படக்குழு வினருடன் இணைந்து நானும் ஈடுபட் டேன். இயக்குநர் விவேக் அந்த வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்றார். டெஸ்ட் ஷுட் நடத்தி சில காட்சிகளைப் பார்த்த பின் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயினும் அருண் விஜய், ரித்விகா சிங் மற்றும் பல சீனியர் நட்சத்திரங் களுடன் இணைந்து நடிப் பதில் எனக்குத் தயக்கம் இருந்தது.ஹீரோவைன் இலக்குக்கு குறுக்கே நிற்கும் வேடம் என்பதால் நடிக்கிறேன். 3மாறுபட்ட தோற்றங்களில் அருண் விஜய் நடிக்கிறார்.
கோவிட் 19 பிரச்னைகள் முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பை நடக்க உள்ளது.
இவ்வாறு மதியழகன் கூறினார்.