படம்: திருச்சிற்றம்பலம்
நடிப்பு: தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, ரேவதி, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனிஷ் காந்த், ஸ்ரீரஞ்சனி
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
இயக்கம்: மித்ரன் ஜவஹர்
பி ஆர் ஒ: ரியாஸ் அஹமத்
நீண்ட நாட்களுக்கு பிறகு
அதாவது கர்ணன் படத்துக்கு பிறகு தனுஷ் நடித்து தியேட்டரில் வெளியாகியிருக்கும் படம் திருச்சிற்றம்பலம்.
தாத்தா திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா), தந்தை பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் வாழ்கிறார் பழம் (தனுஷ்). சில வருடங்களுக்கு முன் அவரது தாய் (ரேவதி), தங்கை இருவரும் விபத்தில் இறக்கின்ற னர். அதற்கு தனது தந்தைதான் காரணம் என்று எண்ணும் பழம் தந்தை மீது கோபம்கொண்டு அவருடன் பேசாமல் இருக்கிறார். இதற்கிடையில் பழம் இரண்டு பேரை காதலிக்கிறார். அதற்கு உடன் படித்த சிறுவயது தோழி உதவுகிறார். ஆனால் இரண்டு காதலும் தோல்வியில் முடிகிறது. சிறுவயது தோழி வைத்திருக்கும் அன்பு புரியாமல் பழம் வேறு காதலை தேடி ஏமாந்த நிலையில் அவன் எடுக்கும் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங் களில் தனுஷை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறார். காதல் டிவிஸ்ட்டுக்கும், சென்டிமென்ட் டுக்கும் பஞ்சமில்லை.
பழமாக நடித்து மீண்டும் பக்கத்து வீட்டு தம்பி இமேஜை மனதில் விதைக்கிறார் தனுஷ்.
தந்தை பிரகாஷ்ராஜுடன் தனுஷ் சண்டைபோடும்போதெல்லாம் தாத்தா பாரதிராஜா இடைமறித்து இருவரையும் சமாதானம் செய்வது பலர் வீட்டில் நடக்கும் அன்றாட காட்சிகள்.
விருமன் படத்தில் பிரகாஷ்ராஜ், கார்த்தியை சண்டை போடும் தந்தை மகனாக பார்த்து அந்த ஞாபகமே மறக்காதநிலையில் அதேபணியில் தனுஷ், பிரகாஷ் ராஜ் போடும் சண்டையும் ரிபீட் அலுப்பு தட்டுகிறது.
அம்மா சென்டிமென்ட்டில் உருகுவது, காதல் புறாவாக பிரிய பவானி சங்கர், ராஷிகண்ணா பின்னால் சுற்றுவது, கூடவே இருந்து தன் மீது பாசத்தை பொழியும் நித்யா மேனன் அருமையை தாத்தா பாரதிராஜா எடுத்துச் சொன்ன பிறகு அவரது காதலை உணர்வது என மாறுபட்ட நடிப்பை வழங்க தவறவில்லை தனுஷ்.
சுட்டித்தனம் மிக்கவராகவும் தனுஷ் மீது பாசம் கொட்டுபவராகவும் நடிததிருக்கும் நித்யா மேனன் சில இடங்களில் நடிப்பில் தனுஷை ஓவர்டேக் செய்கிறார்.
காதல் தோல்வி அடையும் போதெல்லாம் இளையராஜா பாடலில் மூழ்கிவிடும் தனுஷ் தியேட்டரில் இருக்கும் சக பங்காளிகளுக்கும் காதல் வலி மருந்து போடுகிறார்.
பிரியா பவானி, ராஷி கண்ணா இருவருக்கும் குறைவான வாய்ப்பு தான்.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை மித்ரன் ஜவஹர் தனது சென்டிமென்ட், கலகலப்பு மாறாமல் இயக்கியிருக்கிறார். ஆக்ஷனும் கலந்திருந்தால் பெரிதாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்
வழக்கமான ஹிட்டை அனிரூத் தக்க வைக்க தவறியிருக்கிறார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு அழகு .
திருச்சிற்றம்பலம் – பெண்கள் சென்டிமென்ட்.