Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சுதந்திர தியாகிகளுக்கு ஒய் வூதியம் 16 ஆயிரத்திலிருந்து 17ஆயிரம்.. முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஆக 15
74வது சுதந்திர தின விழா இன்று சென்னை கோட்டை யில் நிகழ்ச்சிகள் நடந்தன. ன. இதில் க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்தார்.பிறகு அவர் பேசியதாவது :
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.6650 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத் போராட்ட தியாகிகளுக்கு தமிழக அரசு அளிக்கும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டதால், உரிய காலத்தில் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தூர்வாரும் பணிகள் முன்கூட்டியே நடந்து முடிந்துள்ளதால், கடைமடைப் பகுதிகளுக்கு வழக்கத்தை விட 10 நாட்களுக்கு முன்பாக தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், குறுவைப் பாசனத்திற்கு உதவியாக உள்ளது. மேலும், ரூ.1432 கோடி செலவில் 6278 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

.

Related posts

இந்திய அரசியல் சட்ட 75வது ஆண்டு: கமல்ஹாசன் உறுதிமொழி

Jai Chandran

துல்கர் படம் 100 கோடி வசூலிக்கட்டும்: ராம்கி வாழ்த்து

Jai Chandran

Vikram and his son-in-law Mr.Manu Ranjit congratulated TN CM M.K.stalin

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend