Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தோனி தயாரிப்பில் நதியா – ஹரிஷ் கல்யாண்

கிரிக்கெட் கேப்டன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர் டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இதன் போது  சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயி ருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கி றோம்.” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் வணிகப்பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,“ நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன் மெண்ட்ஸின் நோக்கம். அந்த எண்ணத்துடன் தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதை களையும் தேடிக்கொண்டி ருக்கிறது. மேலும் பல திரைப் படங்களை தமிழில் தயாரிக்க விருக்கிறோம் இந்த படத்தின் பணிகள் தொடங்குவதன் மூலம் நீண்ட மற்றும் பயனுள்ள ஆட்டத்தைத் தொடங்கியிருக் கிறோம். தமிழ் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்.” என்றார்.

 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் படைப்புத் திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்,“ எல் ஜி எம் படத்தின் பணிகள் தொடங்கப்படும் தருணத்தில், படக்குழுவினருடன் உடனிருப்பதில் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி நல்லதொரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைக்கதையாக மாற்றிய மாயஜால வித்தையை நேரடியாக கண்டதால், படத்தைக் காண பேரவலுடன் காத்திருக் கிறேன்.” என்றார்.

Related posts

Tamil Independent song showcased in Billboard Times Square* !!

Jai Chandran

“டங்கி” படத்தை வெளியிடுகிறது ஸ்ரீ கோகுலம் மூவிஸ்

Jai Chandran

என்.டி.ஆர் – திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் தெய்வீக படம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend