Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் ஆல்பத்தில் ஹன்சிகா நடனம்

இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. கக்கார் ( Tony Kakkar ) இசையமைத்து உருவாக்கியுள்ள இப்பாடலை Satti Dhillon இயக்கியுள்ளார்.

இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியதாவது….

இசைத்யுறையில் அனைவரும் கொண்டாடும், இந்தியா முழுதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar )
அவர்கள் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மிகப்பெரும் சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது. இப்பாடல் உருவாகியுள்ள பெரும் திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள்.

Related posts

கடைசி விவசாயி (பட விமர்சனம்)

Jai Chandran

இலங்கை மக்கள் புரட்சி: அதிபர் கோத்தபய தப்பி ஓட்டம்

Jai Chandran

Lyric videos of Vaazhl songs are out now

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend