பிரபல திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்த். சூர்யா நடித்த காப்பான் அயன். தனுஷ் நடித்த அனேகன்,. ஜீவா நடித்த கோ மற்றும் கவண் போன்ற படங்களை இயக்கியத்துடன் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.
56 வ்யதான கேவி ஆனந்துக்கு இன்று (ஏப்ரல் 30ம் தேதி) அதிகாலை 3 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச சென்றனர். இந்நிலையில் அவர் மரணம் அடைந்தார் அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குனர், இளிப்பதிவாளர் என் இரு துறைகளிலிஉம் திறம்பட பணியாற்றிய க்கெ.வி. ஆனந்த காதல் தேசம், நேருக்கு நேர், பாய்ஸ், விரும்புகிறேன் மற்றும் இந்தியில் டோலி சாஜா கெ ரக்ஹனா, ஜோஷ், தி லெஜண்ட் ஆஃப் பாக்தாத் சிங், காக்கி போன்ற இந்தி மேலும் தென்மாவின் கொம்பத்து, மின்னரம், சந்திரலேகா போன்ற மலையாள படங்களையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மீரா, சிவாஜி, மாற்றான். கவண் போன்ற படங்களில் சிறு கதாபாத் திரங்களில் கே.வி.ஆனந்த் நடித்தும் இருக்கிறார். தென்மாவின் கொம்பத்து படத்துக்கா சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசியவிருது வென்றிருக்கிறார். இதுதவிர சிவாஜிம் அயன், கோ, மாற்றான் போன்ற படங்களுக்கு ஃபிலிம்பேர், சைமா விருதுகளும் பெற்றிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்புதான் இயக்குனர் எஸ்பி ஜனநாதன், நடிகர் விவேக் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். தற்போது கே வி ஆனந்த் மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது