Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி முடிவு

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு
ஹைக்கூ போட்டி & 2022
முடிவுகள்
————–
தமிழ்க் கவிதை உலகின் தனித்த அடையாளமான கவிக்கோ அப்துல் ரகுமானின்  நினைவைப் போற்றும் வகையிலும், ‘ஹைக்கூ’ கவிதை வடிவத்தை தமிழ் இலக்கிய உலகில் மேலும் பரவச் செய்யும் வகையிலும் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியை அறிவித்திருந்தோம்.
எங்களின் முயற்சிக்குப் பெருமளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று, எட்டாயிரத்து நாநூறு கவிதைகளை அனுப்பியிருந்தனர்.
நடுவர்கள் குழுவின் மூன்று கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற கவிதைகளை இயக்குநர் என்.லிங்குசாமி  தேர்வு செய்துள்ளார். கவிதை எழுதியவர்களின் பெயர்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

*முதல் பரிசு (ரூபாய் 25,000) : நடா (மலேசியா)*
*இரண்டாம் பரிசு (ரூபாய் 15,000) : இரா.தயாளன் (ஆரணி)*
*மூன்றாம் பரிசு (ரூபாய்: 10,000) : ஜி.கஜபதி (சென்னை)*

அன்புடன்,
என்.லிங்குசாமி- ஆர்.சிவக்குமார்

இப்போட்டியின் பரிசளிப்பு விழா கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவு நாளான 02-.06-.2022 அன்று சென்னையில் நடைபெறும். முதல் மூன்று பரிசு பெற்ற கவிதைகளோடு ரூபாய் ஆயிரம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐம்பது கவிதைகளும் தொகுக்கப்பட்டு டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்’ மூலம் நூலாக விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

Related posts

Koozhangal Selected to be screened in the Indian Panorama

Jai Chandran

தி வாரியர் இந்தி டப்பிங் உரிமை சாதனை

Jai Chandran

The final schedule of ‘Kaliyugam’ begins!*l

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend