Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

குலு குலு ( பட விமர்சனம்)

படம்: குலு குலு

நடிப்பு: சந்தானம், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அதுல்யா சந்த்ரா, பிரதீப் ராவத், தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி, மவுரிஷ், மவுரிஷ், முருககனி, யுவராஜ், எஸ் ஆர், டி.எஸ்.ஆர், தர்ஷன், சேஷு, மகாநதி சங்கர், மாறன்

தயாரிப்பு: எஸ்.ராஜ் நாராயணன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு :விஜய் கார்த்திக் கண்ணன்

இயக்கம்: ரத்னகுமார்

ரிலீஸ்: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்

பி ஆர் ஒ: யுவராஜ்

பல ஆண்டுகளுக்கு முன் காட்டுப் பகுதியில் வசிக்கும் சமுதாயம் நாளடைவில் அங்கிருந்து நகர் பகுதிக்கு வரும்போது அவர்களின் மொழி புரியாத தால் விரட்டியடிக்கப்படுகின்றனர் அந்த கூட்டத்தை சேர்ந்த சந்தானம் இதில் தப்பி பல நாடு, நகரங்கள் சுற்றி கடைசியில் தமிழ்நாடு வருகிறார். பல நாடுகள் சுற்றியதில் பல மொழிகள் பேச தெரிந்த வராக இருந்தாலும் ஒத்தையாக ஒரு தகர குடிசையில் வசிக்கிறார். அன்றாடம் வரும் வேலைகள் செய்து வாழும் அவர் யாராவது உதவி எனறு கேட்டால் உடனே செய்யும் இரக்க குணம் கொண்டவராக இருக்கிறார். சில இளைஞர்கள் தங்கள் நண்பனை யாரோ கடத்தி விட்டார்கள் அவர்களை கண்டு பிடித்து தர உதவ வேண்டும் என்று சந்தானத்திடம் உதவி கேட்கின்றனர். அவரும் அதற்கு சம்மதிக்கிறார். இதற்கிடையில் பெரிய பணக்காரர் ஒருவர் இறக்க அவரது மகன்கள் சொத்துக்காக காத்திருக்கின் றனர். அவரோ தனது 2வது மனைவியின் மகள் மீது எல்லா சொத்துக்களையும் எழுதி வைத்திருக்கிறார். இந்த விவரம் அறிந்ததும் கோபம் அடையும் மகன்கள் அந்தப் பெண்ணை கொல்ல திட்டமிடு கின்றனர். இந்த கோஷ்டியும், சந்தானம் குரூப்பும் எப்படி சந்திக்கின்றனர். அவர்க ளுக்குள் வரும் மோதலின் முடிவு என்ன என்பதை கலகலப்பாக படம் விளக்கிறது.

வழக்கமான சந்தானம் படம் போல் இல்லாமல் மாறுபட்ட பாணியில் படமாகியிருக்கிறது. குலு குலு.

கூகுள் என்ற கதாபாத்திரத்தில் சந்தானம் வருவதுடன் அவரது காஸ்டியூம் லோடு வண்டி ஓட்டுபவரின் உடைபோல் டிசைன் செய்யப்பட்டு தோற்றத்திலும் வித்தியாசப்படுகிறார்.

யாராவது உதவி கேட்டால் உடனே செய்ய ஓடோடி வருவதும் சாலையில் அடிபட்டு செத்துக்கிடக்கும் நாய் ஒன்றுக்காக கண்ணீர் விட்டு அதை சாலையோரத்தில் எடுத்துச் சென்று புதைப்பதும் என்று கேரக்டரை நற்குணம் நிரம்பியவராக இயக்குனர் டிசைன் செய்திருப்பதால் மற்றவர்களை கலாய்த்து தள்ளும் பாணியை கைவிட வேண்டிய நிலைக்குள்ளாகியிருக்கிறார் சந்தானம். ஆனாலும் சமயோசிதமாக யோசித்து உதவி கேட்டு வந்தவர்களை காப்பாற்றி மனதில் இடம்பிடிக்கிறார்.

கிளைமாக்ஸில் வில்லன் பிரதீப் ராவத்திடம் சிக்கி அடி திண்பதும் திருப்பி அடிக்காமல் இப்படி அடி வாங்குகிறாரே என்று எண்ணும்போது ஒற்றே அடியில் வில்லனை சாய்ப்பதும் பரபர.

மொழி பிரச்னை பற்றியும் பேசி அரசியல் டச் கொடுத்திருக்கிறார் சந்தானம்.

பப்ஜி விளையாட்டில் மோதிக் கொண்டு தோற்ற சில சீன இளைஞர்கள் பிரதீப் ராவத்தின் தம்பியையும் அவரது ஆட்களையும் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுவதும், . அவ்வளவு பெரிய கோஷ்டி மோதலை போலீஸும் சாதாரணமாக கடந்துபோவதும் நம்பமுடியவில்லை.

ஹீரோயினாக அதுல்யா சந்த்ரா, நமீதா குருஷ்ணமூர்த்தி நடித்திருக்கின்றனர். டைரக்டர் சொன்னதை அப்படியே செய்துவிட்டு செல்கின்றனர்.

கடத்தல் கோஷ்டியாக வரும் மரியம் ஜார்ஜ் கோஷ்டிதான் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறது. இன்னும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் ரத்னகுமாருக்கு கமர்ஷியல் பார்முளா தெரிந்திருந்தாலும் அந்த பாணியை கையிலெடுக்காமல் படத்துக்கு படம் புதுபாணியை கையாண்டு தனக்கென ஒரு தனி பாணி வகுப்பது அவரை நீண்ட கால பயணத்துக்கு இட்டுச் செல்லும்

சந்தோஷ் நாராயணன் இசை படத்துக்கு பிளஸ்.

விஜய் கார்த்திக் கண்ணன் கேமிரா சாலை பயணத்தை மேற்கொண்டிருக் கிறது.

குலு குலு- சந்தானத்தின் புது பாணி திரைப்படம்.

 

Related posts

Buddy – Musical expression of love

Jai Chandran

Marvel Studios celebrates the movies

Jai Chandran

விக்ரம் பிரபு – .அக்‌ஷய் குமார் நடிக்கும் “சிறை”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend